ஆரோக்கியமான உடலுக்கு பேரீச்சம்பழம் ஒன்றே போதும்!!!
பேரீச்சம்பழம்
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று.பேரீச்சம்பழம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு அருமையான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பழம்.நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, இரும்புச்சத்து ஆகியவை அடங்கிய பேரீச்சம் பழம், உடலை பலவிதமான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. பேரிச்சம் பழத்தில், குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் சோர்வு பலவீனத்தை நீக்கி, ஆற்றலை அள்ளிக் கொடுக்கிறது.எலும்புகளை வலுவாக்க தேவையான கால்சியம் சத்து மட்டுமல்லாமல், செலினியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் பலவீனமான எலும்புகளும் வலுவாகும்..மாதவிடாய் காலத்தில் கடுமையான வலி அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு, பேரிச்சம்பழம் ஒரு வரம் ஆகும்.இது போன்ற பிரச்சனை உள்ள பெண்கள், தொடர்ந்து வெறும் வயிற்றில் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.ரத்த சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு மிக குறைவாக உள்ளவர்கள் கண்டிப்பாக பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டும்.பேரீச்சம் பழத்தை பலர் அப்படியே சாப்பிடுகிறார்கள். தினமும் மூன்று நான்கு பேரிச்சம் பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் எண்ணற்ற பயன்களை அடையலாம் அதன் ஊட்டச்சத்து மதிப்பும் இரட்டிப்பாகும். பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் வைட்டமின் B6 கிடைக்கிறது, இது உடலில் செரோடோனின் உருவாக்க உதவுகிறது. செரோடோனின் ஒரு நல்ல மனநிலையை பராமரிக்கிறது மற்றும் நோர்பைன்ப்ரைன் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.பேரீச்சம்பழம் சாப்பிடுவது ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது, இவை இரண்டும் இதய நோய் மற்றும் ஆத்தரோஜெனீசிஸுக்கு வழிவகுக்கும். பருவகால மாற்றங்களால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பேரீச்சம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அன்றாட வாழ்வில் சுறுசுறுப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பலமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, பருவகால மாற்றங்களால் உருவாகும் நோய்களுக்கு நீங்கள் ஆளாகமாட்டீர்கள்...