அடேங்கப்பா உடலில் ஏற்படும் அனைத்து உபாதைகளுக்கும் வெந்தயம் தீர்வு தருமா???
Fenugreek
வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனைஸ் மற்றும் இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இது மட்டுமில்லாமல், டையோஸ்ஜெனின் என்னும் சேர்மமும் உள்ளது. அதனால்தான் வெந்தயத்தால் இத்தனைப் பயன்கள் நமக்குக் கிடைக்கின்றன.
மாதவிடாய் காலங்களில் சில பெண்கள் அதிக உஷ்ணமாக உணரக்கூடும். கடுமையான வயிற்று வலியும் ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் வெந்தயத்தை சாப்பிடுவது சற்று வெப்பத்தை தணிப்பதுடன், வலியையும் குறைக்கும்.
ஜீரணக்கோளாறால் அவதிப்படுபவர்கள், வெந்தயத்தை சாப்பிடலாம். வெறும் வெந்தயத்தையோ அல்லது முளைக்கட்டிய வெந்தயத்தையோ சாப்பிட்டால், செரிமான பிரச்னை நீங்குவதுடன், வாயுத் தொல்லை இருந்தாலும் நீங்கி விடும்.
தலை முடி வளர்ச்சியில் வெந்தயத்தின் பங்கு முக்கியமானது. அதில் உள்ள எண்ணெய் பசை முடி வளர்ச்சிக்கு உதவுதால், தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் தயாரிப்பில் வெந்தயமும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது முடி உதிர்தலை தடுக்கிறது.
உடல் வெப்பம் காரணமாக உடல் சூட்டை தணிப்பதால் சீதபேதி ஏற்பட்டு அவதிபடுபவர்களுக்கு வெந்தயம் மிகச் சிறந்த மருந்து. வயிறு மற்றும் தொண்டைப் பகுதியில் ஏற்படும் புண்களை வெந்தயம் குணமாக்குகிறது. மேலும் இதன் உடலைக் குளிர்ச்சியாக்கும் இயல்பு உடலில் ஏற்படும் கொப்புளங்களைக் குணப்படுத்துகிறது.
இரவு வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் அரைத்து முகத்தில் பூசினால் எண்ணெய் வடிதல் நீங்கி சருமக் குழிகளில் தேங்கியிருக்கும் அழுக்குகளும் நீங்கும். வெந்தயத்தை பேஸ்டாக அரைத்து முகத்தில் தேய்ப்பதால் முகச் சருமம் இறுகி சுருக்கங்கள் நீங்கும். இழந்த இளமையை மீட்க உதவும்.இது நச்சுக் கிருமிகளை நீக்க உதவும். வெந்தயத்தை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து அது ஆறியதும் வெந்தயத்தை நீக்கிவிட்டு தண்ணீரை தினமும் பருக்கள் உள்ள இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.