கிரீன் டீ நம் ஆரோக்கியத்திற்கு இத்தனை நன்மைகள் தருகிறதா ? அப்போ நானும் இனிமே கிரீன் டீ தான் !!
கிரீன் டீ
கிரீன் டீயில் எபிகல்லோகேடசின் கேலேட் எனப்படும் உயிர்வேதியியல் பொருள் ஏராளமாக உள்ளது, இது உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகிவருவதால், பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும்.
கிரீன் டீயில் பாலிபினால்கள் உள்ளதாக ஆய்வுகள் கண்டுபிடிப்பில், இது புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. தற்போதுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்கள் வேகமாக வளர உதவும் கட்டிகளுக்குள் புதிய இரத்த நாளங்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது.
ஒரு பெண்ணின் ஹார்மோன் ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்த கிரீன் டீ உதவுகிறது. தொடர்ந்து உட்கொண்டால், இது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது மற்றும் சுழற்சியின் போது ஏற்படும் அதிகப்படியான வயிற்றுப் பிடிப்பைக் குறைக்கிறது. கிரீன் டீயில் உள்ள ஃபிளாவனாய்டு மற்றும் கேட்டசின்கள் ஆரோக்கியமான முறையில் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனை அதிகரிக்க உதவுகிறது.
கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைத் தூண்டும் தன்மை படைத்தது. கிரீன் டீ அருந்தும்போது, இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். கிரீன் டீயில் உள்ள கேடசின்கள் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன, இது பல் சிதைவு போன்ற பல்வேறு பல் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம். க்ரீன் டீ குடிப்பதால், தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைத்து, பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.