கடினமான உடற்பயிற்சிகள் சருமத்தை பளபளப்பாக்குமா?
உடற்பயிற்சி
கடுமையான மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் நம் உடல் நலம் காப்பதோடு சரும ஆரோக்கியமும் காக்கும் என கூறப்படும் நிலையில் இதன் உண்மை நிலை குறித்து நாம் காணலாம். உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில்உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் டோபமைன், செரோடோனின், எண்டோர்பின், அட்ரினலின் மற்றும் பல ஹார்மோன்கள் வெளிப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கிய மற்றும் சரும ஆரோக்கியம் என ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
நிபுணர்களின் கூற்றுப்படி கோர் பயிற்சிகள் இந்த ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றன. குறிப்பாக, Weightlifting எனும் பளு தூக்குதல் பயிற்சி ஆனது கூடுதல் நன்மை அளிக்கிறது.இந்த கடின உடற்பயிற்சிகள் அடிப்படையில் தசைகளின் அழுத்தத்திற்கு உதவுகிறது. மேலும் சரும துளைகளில் மறைந்திருக்கும் மாசுக்களை நீக்கி - சுத்தம் செய்த, பொலிவான மற்றும் பளபளப்பான சருமம் பெற உதவுகிறது!தொடர்ச்சியான உடற்பயிற்சிகளின் போது சருமத்தில் சீரான இரத்த ஓட்டம் நிகழ்கிறது. இந்த சீரான இரத்த ஓட்டம் ஆனது சருமத்தின் பளபளப்பிற்கு பல வகையில் வழி செய்கிறது.
முதுமை தோற்றத்திற்கும் நம் மன அழுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படும் டோபமைன், செரோடோனின், எண்டோர்பின், அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள், மன அழுத்தத்தை போக்கி பொலிவான சருமம் பெற உதவுகிறது!பளு தூக்குதல் பயிற்சி ஆனது சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்வதோடு சரும கொலாஜன் உற்பத்தியையும் ஊக்குவிக்கிறது. இந்த கொலாஜன் அளவு சரும ஆரோக்கியம் காப்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உடற்பயிற்சிகளின் மிக முக்கியமான பலன்களில் ஒன்று உடல் எடை மேலாண்மை. இளமை தோற்றத்திற்கு இந்த உடல் எடை மேலாண்மை அவசியமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், இளமைக்கும் - உடற்பயிற்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது!பளுதூக்குதல் போன்ற கடுமையான உடற்பயிற்சிகள் உங்கள் சரும ஆரோக்கியம் காக்க உதவும் என கூறப்படும் நிலையிலும், உடற்பயிற்சியின் போது வெளிப்படும் வியர்வை சருமத்தில் அதிக நேரம் தங்கும் போது எதிர்மறை விளைவுகளை உண்டாக்க கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.