ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த விதையை வெறும் வயிற்றில் குடியுங்கள்!!

ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த விதையை வெறும் வயிற்றில் குடியுங்கள்!!

சப்ஜா விதைகள்

சப்ஜா விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன பலருக்கு தெரிந்திருந்தாலும், அதனை எப்படி? எப்போது? சாப்பிடுவது என்பது பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.இந்த விதைகளில் முக்கிய வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் உள்ளன. எனவே, காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் சப்ஜா விதை தண்ணீரை குடிப்பதன் மூலம் எடை இழப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை பல நன்மைகள் கிடைக்கின்றன.

1.எடை இழப்பு: சப்ஜா விதையை இரவு தண்ணீரில் ஊறவைக்கும் போது அந்த விதைகள் ஊறிப் போய் அதில் இருக்கும் நார்ச்சத்து அதிகரிக்க தொடங்குகிறது. எனவே, காலையில் வெறும் வயிற்றில் அந்த விதையுடன் தண்ணீரையும் சேர்த்து குடித்தால் ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

2.சர்க்கரை நோயாளிகள்: சப்ஜா விதைகளில் இருக்கும் நார்ச்சத்து செரிமானம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் உயராமல் தடுக்கப்படுகிறது.

3.சரும ஆரோக்கியம் : சப்ஜா விதையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன அவை முகப்பரு மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

4.மன அழுத்தம்: சப்ஜா விதை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கருவியாக செயல்படுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நரம்பியல் கடத்தி செயல்பாட்டையும் ஒழுங்குபடுத்தும்.

5.இதய ஆரோக்கியம்: சப்ஜா விதைகள் மாரடைப்பை தடுக்கவும் மற்றும் இரத்தத் தட்டு கட்டிகளின் வாய்ப்பை குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது பல்வேறு இதய கோளாறுகளுக்கும் உதவுகிறது.

6.நோய் எதிர்ப்பு சக்தி : சப்ஜா விதையில் இருக்கும் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

7.செரிமான ஆரோக்கியத்திற்கு: சப்ஜா தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, வயிற்று உப்புசம், வாயு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது.

Tags

Next Story