முகத்துக்கு ஆவி பிடித்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா !!
health
முகத்தில் நீராவி பிடிப்பதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கு இது உதவுகிறது. நீராவி பிடிப்பதால் முகத்தில் உள்ள துளைகள் திறக்கப்பட்டு துளைகளின் உள்ளிருக்கும் அழுக்குகள் மற்றும் எண்ணெய் பிசுக்குகள் வெளியேற்றப்படுகின்றன. மேலும் இது சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது. சருமத்தில் உள்ள வெடிப்புகள் போன்றவற்றை சரி செய்வதற்கு இந்த நீராவி பிடித்தல் பராமரிப்பு முறை உதவுகிறது.
நீராவி பிடிப்பது நமது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக உடற்பயிற்சி போன்ற பயிற்சிகள் முடித்தவுடன் நீராவி பிடிப்பதன் மூலம் நல்ல பலனை பெற முடியும். சருமத்திற்கு பளபளப்பு தன்மையை பெற்றுத் தரவும் இந்த முறை உதவுகிறது.
வாரத்திற்கு ஒருமுறை முகத்தில் நீராவி பிடித்தல் முகப்பரு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. முகத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் எண்ணெய் பிசுக்குகளை நீக்குவதன் மூலம் இவை தடுக்கப்படுகின்றன.
சருமத்தில் வறட்சி ஏற்படாமல் தடுப்பதற்கு வாரத்திற்கு ஒரு முறை நீராவி பிடித்தல் உதவுகிறது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து சரும வறட்சியை தடுக்க உதவுகிறது. நீராவி பிடிப்பதன் மூலம் சருமத்தில் நீர் சத்து குறைபாட்டினை தடுக்க முடியும். சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறுவதற்கு இந்த முறை உதவுகிறது.
சருமம் இளமையாகவும் வயதானது போன்ற தோற்றம் அளிக்காமல் இருப்பதற்கு கொலாஜன் உற்பத்தி மிகவும் அவசியம். இது போன்று ஆவி பிடிப்பதன் மூலம் அது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது.