பூக்கள் வாடாமல் இருக்க..!
பூக்கள்
மஞ்சள் கிழங்குகளை உலர்த்தி ஈரமில்லாத பாட்டில்களில் ஒரு துண்டு கெட்டியான கற்பூரத்துடன் போட்டு இறுக மூடி வைத்தால் உளுத்துப் போகாது.
பூக்கள் வாடாமல் இருக்க ஈரத்துணியில் சுற்றி வைக்காதீர்கள். பூக்களை ஒரு தட்டில் வைத்துத் தண்ணீரில் அலம்பிய ஒரு பாத்திரத்தை அதன் மீது கவிழ்த்து வைத் தால் போதும். காலையில் எடுத்துப் பார்த்தால் அந்தப் பூக்கள் புதிதாகப் பறித்த மலர்கள் போலவே இருக்கும்.
பூக்குவளையில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு விட்டால் பூக்குவளையில் வைக்கப்படும் பூக்கள் நீண்ட நேரம் புதியவையாகவே இருக்கும் . சீக்கிரம் வாடாது.
வீட்டில் உள்ள அலங்காரச் செடிகள் பளிச் சென்று இருக்கச் சமையல் எண்ணெயில் பஞ்சை முக்கிச் செடிகளின் இதழ்கள் மீது தேய்க்கவும்.
முட்டையின் ஓடுகளையும், டீத்தூள் சக்கையையும் சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைத்த பிறகு அதை ரோஜா செடிகளுக்கு உரமாக போட்டால் செடி பெரிய பூக்களை பூக்கும்.