தொற்றுகளை அழிக்க சாப்பிடவேண்டிய உணவுகள் !!

தொற்றுகளை அழிக்க சாப்பிடவேண்டிய உணவுகள் !!

health

இஞ்சி மிகச்சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு எதிர் உயிர்ப்பொருள் மற்றும் அழற்சி நீக்கி உணவாகும். இதில் gingerol, terpenoids, shogaol, zerumbone மற்றும் zingerone மற்றும் சக்தி வாய்ந்த ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இது நுண்ணுயிர் கொல்லியாகவும் செயல்படுகிறது. இது பலவிதமான பாக்டீரியாக்களை எதிர்த்து சிறப்பாக போரிடுகிறது.


வெங்காயத்தில் சிஸ்டைன் ஸல்பாக்ஸைடுகள் (cysteine sulphoxides) என்னும் தெரபெடிக் சல்பர் காம்பவுண்ட்ஸ் (therapeutic sulphur compounds) மற்றும் ஃபிளாவனாய்டுகள் இருக்கின்றன. இவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளாக அருமையாக செயல்படுகின்றன.


சக்தி வாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு எதிர் உயிர்ப்பொருள் மற்றும் பூசண எதிர்ப்பி (anti fungal) சேர்மங்கள் (compounds) carvacrol மற்றும் thymol வடிவங்களில் ஆரிகனோ எண்ணெயில் உள்ளது. இது பலவிதமான பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. செயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் அழியாத பாக்டீரியாக்களை எதிர்த்து கூட போராடுகிறது. ஈ - கோலை குணப்படுத்த பயனுள்ள வகையில் செயலாற்றுகிறது. ஆனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.தூய்மையான எண்ணெயை மட்டுமே உபயோகியுங்கள். அதற்கு எண்ணெயை வாங்கும் போதும் தரமாக வாங்குங்கள்.


பூண்டில் அலிசின் இருக்கிறது. இது பலவிதமான பாக்டீரியாக்களுக்கு எதிராக சிறப்பாக போராடுகிறது. ஆனால் இதை அளவாக தான் சாப்பிட வேண்டும். ரத்தப்போக்கு கோளாறு உள்ளவர்கள் இதை சாப்பிடும் முன்பு மருத்துவரை பரிசீலியுங்கள் .மேலும் குழந்தைகளுக்கு இது உகந்ததல்ல. பூண்டு பொது மற்றும் அரிதான தொற்றுகளுக்கு காரணமான நோய்க்கிருமிகளை அழிக்க வல்லது. இதில் சக்தி வாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு எதிர் உயிர்ப்பொருள் மற்றும் நுண்ணுயிர் கொல்லி (anti microbial) இருக்கிறது. இதை அப்படியே சாப்பிடுவது மிகவும் நலம்.


தேனும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட வல்லது. ஆனால் மனுகா தேன் மற்ற எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது. இந்த தேன் நியூசிலாந்தில் கிடைக்கிறது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் , நுண்ணுயிர் கொல்லிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு எதிர் உயிர்ப்பொருள் போன்ற பண்புகள் இருக்கின்றன.




Tags

Next Story