எடை இழப்பு முதல் செரிமானம் வரை.. கறிவேப்பிலை நீர்!!
கறிவேப்பிலை
உணவின் சுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் இது உடல் ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மை பயக்கிறது. கறிவேப்பிலை நமது தினசரி உணவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு இலையாகும்.கறிவேப்பிலை தண்ணீர் நமக்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. 1.சிறந்த செரிமானம்: செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும்.கறிவேப்பிலை அல்லது கறிவேப்பிலை நீரை தொடர்ந்து உட்கொண்டால் வாயுத்தொல்லை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் நம்மை நாம் காத்துக்கொள்லலாம். 2.எடை இழப்பு: உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கறிவேப்பிலை நீரை எடை குறைக்கும் பானமாகவும் பயன்படுத்தலாம். இதனை குடிப்பது உடல் பருமனைக் குறைப்பது மட்டுமல்லாமல் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.3.உடலில் உள்ள நச்சுகளை நீக்கும்: இந்த இலைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், தோல் பிரச்சினைகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது.4.சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது: கறிவேப்பிலை இயற்கையாகவே இன்சுலின் உற்பத்தியின் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. கறிவேப்பிலையை தினமும் பயன்படுத்தும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு (Sugar Level) சீராக இருக்கும். இதில் உள்ள ஃபிளாவனாய்டு உணவில் இருக்கும் ஸ்டார்சை குளுக்கோஸாக மாற்றும். இதனால் சர்க்கரை அளவை சமன்படுத்துவதில் உடலுக்கு உதவி கிடைக்கிறது.