வாயுத் தொல்லையா? இதை முதலில் செய்யுங்க!

வாயுத் தொல்லையா? இதை முதலில் செய்யுங்க!

வாயுத் தொல்லை

பொதுவாக மலச்சிக்கலால்தான் வாயுத் தொந்தரவு ஏற்படுகிறது. வாயு ஏற்பட்டால் இடுப்பு வளையாது கம்பாக நிற்கும் கீழே குனிந்து எந்தப் பொருளையும் எடுக்க இயலாது. ஏப்பம் அடிக்கடி வந்து வாயு கலைந்து செல்லும்

வாயுத் தொந்தரவு உள்ளவர்கள் காலையில் எழுந்ததும். வயிறு நிறையக் குளிர்ந்த நீர் அருந்தியவுடன் நடைப் பயிற்சி செய்யலாம் பின்னர் இயல்பாக மலங்கழிக்க வேண்டும் அதன்பின்னர் எனிமாக் குவளையைப் பயன்படுத்தி மலக்குடலில் தங்கியுள்ள மலக் கழிவைச் சுத்தமாக அப்புறப்படுத்த வேண்டும். இதுபோல் மாலையிலும் எனிமா எடுக்க வேண்டும். காலை. மாலை இரு வேளைகளும் பச்சைத் தண்ணீரில் நன்கு குளிக்கவேண்டும்.

பின்னர் யோகாசனப் பயிற்சிகள் குறிப்பாக, பவன முக்தாசனம் செய்து வர வேண்டும் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் பொழுதும் மற்ற நேரங்களிலும் ஓய்வாக இருக்கும் பொழுதெல்லாம் பவன முக்தாசனம் செய்து வந்தால் ஆசனத் துவாரத்திலிருந்து கெட்ட காற்று வெளியே பிரியும்: இவ்வாறு ஆச னத் துவாரம் மூலம் வாயு பிரியப் பிரிய வாயுத் தொந்தரவு குறையும்.

காலை மாலை இருவேளைகளும் இயற்கை உணவும் பகலில் மட்டும் சமைத்த சைவ உணவும் உண்ண வேண்டும். வாழைப்பழம், ஆப்பிள் எலுமிச்சம் பழம், அன்னாசிப்பழம் ஆகியன அதிகம் சேர்க்க வேண்டும்

துளசிச் சாறு 2 தேக்கரண்டி தேன் 2 தேக்கரண்டி கலந்து காலை மாலை நாள்தோறும் இருவேளையும் ஐந்து நாடகள் தொடர்ந்து குடித்து வந்தால், வாயுத் தொந்தரவு நீங்கும்.

துளசியிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாற்றைக் கலந்து ஏழு நாடகள் குடிக்கவும். வெள்ளைப் பூண்டை நன்கு வதக்கிப் பகல் உணவுடன் நாற்பது நாட்கள் உண்டு வரலாம். பகல் உணவுடன் அரைக்கீரை சேர்க்கவும். சீரகத்தூளைத் தெறி, வலந்து சாப்பிடவும் (வேப்பம்பூத்தூள் நான்கு சிட்டிகையெடுத்து மல்லி கசாயத்தில் கலந்து குடித்தால் வாயு தொந்தரவு நீங்கும். வெந்தயக் கீரை கொண்டு வந்தாலும் பலன் கிடைக்கும்.

Tags

Next Story