கால்சியம் குறைபாட்டை போக்க இதை சாப்பிட்ட போதும் ? எலும்புகள் ஸ்ட்ராங் ஆகிடும்..!

கால்சியம் குறைபாட்டை போக்க இதை சாப்பிட்ட போதும் ? எலும்புகள் ஸ்ட்ராங் ஆகிடும்..!

தாமரை விதை

தாமரை பூவில் இருந்து விதைகளை சாப்பிட்டாலும் நமக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

தாமரை விதைகளை தினசரி 2 அல்லது 4 முறை சாப்பிட்டால் ஒரு ஆணுக்கு குதிரைக்கு நிகரான பலம் கிடைக்குமாம். தாமரை விதைகளை நேரடியாகவும் சாப்பிடலாம் அல்லது தாமரை விதைகளை வறுத்து, இனிப்பு சேர்த்து சாப்பிடலாம்.

கால்சியம் சத்து நிறைந்தது : பொதுவாக நமக்கு கால்சியம் சத்து கிடைக்க நாம் பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறோம். அதற்கு ஈடான கால்சியம் சத்து தாமரை விதைகளிலும் கிடைக்கிறது. இந்தக் கால்சியம் சத்துதான் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஆகவே, மூட்டு வலி பிரச்சனையால் அவதி அடைபவர்கள் இதைச் சாப்பிட்டு பலன் அடையலாம்.

தூக்கத்தை மேம்படுத்தும் : அளவுக்கு அதிகமான ஸ்ட்ரெஸ் காரணமாக தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு இன்றைக்கு பலரும் அவதி அடைகின்றனர்.

அத்தகைய மக்கள் இரவு தூங்கச் செல்லும் முன்பாக ஒரு கிளாஸ் பாலில் சிறிது தாமரை விதைகளை கொதிக்க வைத்து சாப்பிட்டால் நல்ல சுகமான தூக்கம் வரும்.

தசைகள் வலுப்படும் : தசைப்பிடிப்பு அல்லது தசைவலி போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் தாமரை விதைகளை சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு தாமரை விதைகளை கொடுத்தால் அவர்களுடைய தசைகள் வேகமாக வளர்ச்சி அடையும்.

தாமரை விதைகளை சாப்பிடுவதால் பெரிய அளவுக்கு சொல்லிக் ஒள்ளும்படியான பக்கவிளைவுகள் எதுவும் இல்லை. ஆனால், உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதுகுறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

Tags

Next Story