வீட்லயே ஹேர் ஸ்பிரே ! இனிமே வெளியே காசு கொடுத்து வாங்க தேவையில்லை !!

வீட்லயே ஹேர் ஸ்பிரே ! இனிமே வெளியே காசு கொடுத்து வாங்க தேவையில்லை !!

health

தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசினாலும் அடுத்த நாளே பிசுபிசுப்பாக ஆகிவிடும். அதிலும் வெயில் காலத்தில் இந்த பிரச்சினை அதிகமாகவே இருக்கும். இதை சரிசெய்து பளபளப்பாக வைப்பதற்க்கு நிறைய செலவுகள் ஆகும்.தலைமுடியைப் பராமரிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. முடி உதிர்வது, பொடுகுத் தொல்லை, ஆயில் ஸகால்ப், நுனி முடி பிளவு, முடி வறட்சி என ஏராளமான பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

எளிமையான மூன்று பொருள்கள் இருந்தாலே போதும். இந்த ஹேர் ஸ்பிரே தயார் செய்யலாம்.


தேவையான பொருள்கள்

*ரோஸ் வாட்டர் - 1 கப்

*வைட்டமின் ஈ மத்திரை - 4

*புதினா ஆயில் (அ) பெப்பர்மிண்ட் எசன்ஷியல் ஆயில் - 2 ஸ்பூன்

ஒரு பெரிய பாடடிலில் ரோஸ்வாட்டர், வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் புதினா ஆயில் மூன்றையும் கலந்து நன்கு குலுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் அளவு மட்டும் சிறிய ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் முடியை பளபளப்பாகவும் வாசனையாகவும் இந்த ஹேர் ஸ்பிரே வைத்து கொள்ளும். தலைக்கு வழக்கம் போது ஷாம்பு மற்றும் கன்டிஷ்னர் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தலைமுடியை நன்கு அலசிக் கொள்ளுங்கள். பிறகு முடியை உலர விடுங்கள். முழுமையாக உலர வேண்டாம். பாதியளவுக்கு முடி உலர்ந்ததுமே இந்த ஸ்பிரேவை பயன்படுத்தலாம். முடியின் வேர்க்கால்களில் கூட இதை ஸ்பிரே செய்யலாம். பிறகு முழுமையாக முடியை உலர்த்திக் கொள்ளுங்கள்.

Tags

Next Story