வாழை தண்டு ஆரோக்கிய நன்மைகள் !!!

வாழை தண்டு ஆரோக்கிய நன்மைகள் !!!

வாழை தண்டு 

வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும்.

வாழைப்பழங்கள் போன்று வாழைத்தண்டுகளும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.

இது தசைகள் சேதமில்லாமல் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. வாழைத்தண்டு கூட்டாகவோ. பச்சையாக சாலட் செய்தோ, பொரியலாக்கியோ, எளிதான முறையில் சாறாக்கியோ குடிக்கலாம்.

சிறுநீரக கற்களால வலிமிகுந்த உபாதையை அனுபவிப்பவர்கள் வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறகூடும். இதை அவ்வபோது சேர்த்து வந்தால் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று காரணமாக உண்டாகும் வலி அசெளகரியங்களுக்கும் இவை சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.

வாழைத்தண்டு வைட்டமின் பி 6 என்னும் உயர்ந்த சத்தை தன்னுள் கொண்டுள்ளது. இது உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடும். வாழைத்தண்டு பொட்டாசியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது கொழுப்பு மற்றூம் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிசை அளிக்க உதவும்.

வாழைத்தண்டை அவ்வபோது சேர்த்து வருவதன் மூலம் உடலில் அதிக இரத்த அழுத்தத்தை கொண்டிருப்பவர்கள் கட்டுக்குள் வைக்கலாம். குறைந்தது உடலுக்கு ரத்த அழுத்த பிரச்சனையால் உண்டாகும் விளைவுகளின் அபாயத்தை குறைக்க செய்யும்.

இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மிக குறைந்த கலோரிகள் கொண்டிருப்பதால் இதை தினசரி ஒரு கப் என்று திட்டமிட்டு எடுத்துகொண்டால் எடை அதிகரிப்பு எப்போதுமே கிடையாது.

இதில் சர்க்கரை இல்லை என்பதால் இதன் சாறு ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தாது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் இது நீரிழிவு இருப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.

வாழைத்தண்டுகளின் சாறு உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது சிறந்த டையூரிடிக் பண்புகளை கொண்டிருப்பதால் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது.

உடலை சுத்தம் செய்வதோடு முக்கியமாக குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது. இது நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் குடல் இயக்கங்கள் சீராகிறது. செரிமானம் மேம்படுகிறது. மலச்சிக்கலும் வராமல் தடுக்கிறது.

அமிலத்தன்மையுடன் உங்களுக்கு அடிக்கடி பிரச்சனைகள் இருந்தால் இந்த வாழைத்தண்டு சாறு உடலில் அமிலத்தன்மை அளவை கட்டுப்படுத்த செய்யும்.

Tags

Next Story