சுலபமாக கிடைக்கும் முருங்கப்பூவின் ஆரோக்கிய நன்மைகள் ! இத்தனை நோய்களுக்கு தீர்வா ????
முருங்க பூ
40 வயதிற்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண்ணாடி இல்லாமல் எதுவும் படிக்க முடியாது.இதனை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளெழுத்து மாறும்,கண்ணீல் உண்டாகும் வெண்படலமும் மறைந்து கண் பார்வை சரியாகும். ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.பலருக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருப்பதில்லை. இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும்.
முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து அதே ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும்.முருங்கைப்பூவை துவையல் செய்தும் சாப்பிடலாம். இப்படி ஏதோ ஒரு வகையில் முருங்கைப்பூக்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும்.