ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வறுகடலை !!!

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வறுகடலை !!!

வறுகடலை 

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வறுகடலை !!! உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் ஆகிய வைட்டமின் ஏ , வைட்டமின் பி 1 , பி 2, பி 3 , வைட்டமின் சி, வைட்டமின் டி ஆகியவற்றை கொண்ட பொட்டுக்கடலை அப்படியே சாப்பிடலாம். கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால், பசிக்கும்போது கொஞ்சம் பொட்டுக்கடலையை நொறுக்குத்தீனியாக உண்டால், அது ஊட்டச்சத்தையும் கொடுத்து உடல் எடை குறைப்பை துரிதப்படுத்தும். குறைந்த கலோரிகள் கொண்டது பொட்டுக்கடலை. 100கிராம் பொட்டுக்கடலையில் 480 கலோரிகள் உள்ளன.பொதுவாக தினசரி உணவில் பொட்டுக்கடலையை சேர்த்துக் கொள்வது நல்லது என்பது உண்மை. பொட்டுக்கடலையின் நோய் தீர்க்கும் பண்புகள்: 1.செரிமானத்தை மேம்படுத்தும் - செரிமான கோளாறுகள் இருப்பவர்கள் பொட்டுக்கடலையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பொட்டுக்கடலையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமானம் மேம்படுகிறது. 2.மலச்சிக்கலை போக்கும் -குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட பொட்டுக்கடலை, குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது, குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பொட்டுக்கடலை நல்லது. 3. இரத்த சர்க்கரையை சீராக்கும் - ஹார்மோன் சுரக்கும் அளவை கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ள பொட்டுக்கடலை இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கவும் உதவுகிறது.. 4.இதயத்தின் பாதுகாவலன் - இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இதய நோய் வராமல் தடுக்கின்றன.பொட்டுக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளது. அத்துடன் போலேட் , காப்பர் , பாஸ்பரஸ் என பல ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், உடலில் படிந்துள்ள தேவையான கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தை பாதுகாக்க பொட்டுக்கடலை உதவும்.

Tags

Next Story