ஆரோக்கியம் தரும் கீரைகள்!

ஆரோக்கியம் தரும் கீரைகள்!

ஆரோக்கியம் தரும் கீரைகள்!

கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம்..

இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது.

கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன.

கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம், ரத்த சோகை வருவதை தடுத்து நல்ல உடல் நலனை பெறலாம்..

உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கீரைகளில் நிரம்பி இருக்கின்றன.. நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள் வைட்டமின்கள் பி1 பி2 பி6 மற்றும் சி ஆகியவை கிடைக்கின்றன.

கீரை வகைகளும் அதன் பயன்களும்:

1. அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

2. காசினிக் கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும், உடல் வெப்பத்தை தணிக்கும்.

3. சிறுபசலைக்கீரை- சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

4. பசலைக் கீரை- தசைகளைச் பலமடைய செய்யும்.

5. மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

6. குப்பை கீரை- பசியை தூண்டும் வீக்கம் வத்த வைக்கும்.

7. புளியங்கீரை- சோகையை விலக்கும், கண் நோயை சரியாக்கும்.

8. பொன்னாங்கண்ணி கீரை- உடல் அழகையும் கண் ஒளியையும் அதிகரிக்கும்

Tags

Next Story