கால் வீக்கத்தை குறைக்க உதவும் பாட்டி வைத்தியங்கள் !!
கால் வீக்கம்
கால்களில் ஏற்படும் காயம், உணவுப் பழக்கம் ,கர்ப்பம் போன்ற பல காரணங்களால் கால் வீக்கம் ஏற்படுகிறது. எனினும் உடனடி மருத்துவ கவனிப்பு வீட்டு வைத்தியம் போன்றவற்றால் இந்த வீக்கத்தை நாம் குறைக்கலாம். உடலில் உள்ள நஞ்சு பொருட்கள் மற்றும் அளவுக்கு அதிகமான திரவங்களை நீக்க எலுமிச்சை சாறு பருகலாம். எலுமிச்சை சாறை தினமும் குடித்து வர நல்ல மாற்றம் தெரியும்.
காயம் காரணமாக கணுக்கால் மற்றும் பாதத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு ஐஸ் பேக் வைக்கலாம் அல்லது கம்ப்ரஷன் பேண்டேஜ் அணிந்து கொள்ளலாம். இரண்டும் இல்லாத பட்சத்தில் குளிர்ந்த நீரில் கால்களை ஊற வைக்கலாம். உட்காரும்போது படுக்கும்போதும் உங்கள் கால்களை சற்று உயர்த்தி வைப்பது கால்களின் வீக்கத்தை குறைக்க உதவும் இரவு தூங்கும் போது மார்பின் அளவுக்கு உயர கால்கள் இருக்கும் வகையில் உயர்த்தி வைத்தல் நல்லது.
அளவுக்கு அதிகமான மது உடலில் உள்ள நீரை வற்ற செய்து வீக்கத்தை அதிகரிக்கும் மது அருந்துவதை நிறுத்தி இரண்டு நாட்கள் கடந்தும் வீக்கம் நீடித்தால் மருத்துவரை அணுகுதல் நல்லது வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து அதில் காலை ஊற வைத்து வந்தால் வீக்கம் வலி குறையும் எனினும் காயம் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு இந்த முறையை தவிர்த்தல் நல்லது.
கால் வீக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நீர்த்தேக்கம் தான் எனினும் தண்ணீர் குடிப்பதால் இந்த கால் வீக்கம் குறையும் காரணம் போதிய அளவு தண்ணீர் குடிக்க தவறினால் உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்படுகிறது. கால் வீக்கத்தை குறைப்பதற்கு எளிய மசாஜ் முறைகளை நாம் பயன்படுத்தலாம் பாதங்களுக்கு மசாஜ் செய்வது கால்களில் தேங்கியுள்ள திரவத்தை அகல செய்து வீக்கத்தை குறைக்க உதவும்.
உண்ணும் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது உடலில் திரவம் தேங்குவதை தவிர்த்து வீக்கத்தை குறைக்க உதவும் மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது கூடுதல் நன்மை தரும்.