காதுகளை சுத்தம் செய்வது எப்படி ???
காது
காதுகளை ற பட்ஸ் அல்லது பருத்தித் துணிகள் கொண்டு சுத்தம் செய்யும்போது காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இது அதிக வலியை ஏற்படுத்தக்கூடும். காதுகளை சுத்தம் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. காதுகளில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்கு பெரிதாக மெனக்கிட வேண்டியது இல்லை. அழுக்கு சேரும் போது அது தானாகவே வெளியேறிவிடும்.
சுத்தமாக இருப்பது ஆரோக்கியம் தான் என்றாலும், காது பகுதிகளில் அடிக்கடி சுத்தம் செய்வது பாதிப்பினை ஏற்படுத்தும். காதுகளில் படியும் தூசி அல்லது அழுக்குகள் காதுகளை பாதுகாக்கவே இருக்கிறது. மேலும் அதிகப்படியான அழுக்குகள் படியும் போது தன்னை தானே சுத்தப் படுத்திக் கொள்ளும் தன்மைகளைக் கொண்டது நம் காதுகள். ஒருவேளை உங்கள் காதுகளில் அதிகமாக அழுக்கு படிந்து இருப்பதாக உங்களுக்கு தோன்றினால், மருத்துவ உதவியை நாட வேண்டும்.
காதுகளை சுத்தம் செய்வதற்கு பெரும்பாலும் நாம் பட்ஸ், பருத்தியில் ஆன துணிகள் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். இது காதுகளை சுத்தப்படுத்துகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கு மாறாக அது காதில் உள்ள அழுக்குகளை மேலும் உள்ளே தள்ளி பாதிப்பினை ஏற்படுகிறது. இப்படி காதுகளுக்குள் சேகரிக்கப்படும் அழுக்குகளால் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
காதுகளின் வெளிப்புற பகுதிகளை மட்டுமே சுத்தமான துணிகளை வைத்து சுத்தம் செய்யலாம். காதுகளில் ஹேர்பின்கள், பின்னூசி, பறவைகளின் இறகுகள் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். காதுகளில் வலி, சீழ் வடிதல், வீக்கம், கேட்பதில் சிரமம், காதுகளில் சப்தம், அசௌவுகரியம் போன்ற ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும் மருத்துவராய் சந்தித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது.