குழந்தைகளை தாக்கும் ஜிங்க் குறைபாடு கண்டறிவது எப்படி !!

குழந்தைகளை தாக்கும் ஜிங்க் குறைபாடு கண்டறிவது எப்படி !!

 ஜிங்க் 

குழந்தைகளுக்கு உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடுகளை முக்கிய பங்கு வகிப்பது ஜிங்க் குறைபாடு இந்த ஜிங்க் குறைபாட்டின் பாதிப்புகள் என்ன ? அறிகுறிகள் என்ன ? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். உடல் எலும்புகளின் நீட்சிக்கு ஜிங்க் அவசியமான ஒரு ஊட்டமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஊட்டத்தின் தட்டுப்பாடு உண்டாகும் போது எலும்புகள் ஆரோக்கியம் பாதிப்பதோடு வளர்ச்சி குறைபாடு ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

ஜிங்க் குறைபாடு உள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிலக்கிறது. இதன் விளைவாக குழந்தைகள் அடிக்கடி கிருமி தொற்றுகளையும் கிருமி தொற்றுகளால் உண்டாகும் சளி, காய்ச்சல் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள கூடும். குழந்தைகளின் எதிர்கொள்ளும் ஜிங்க் தட்டுப்பாடு ஆனது அவர்களின் நரம்பு மண்டல ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

அந்த வகையில் மூளை ஆரோக்கியமும் பாதித்து நினைவாற்றல் அறிவாற்றல் பிரச்சனைக்கு வழி வகுக்க கூடுகிறது. உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுவதில் ஜிங்க் பங்களிப்பு அதிகம் ஏனெனில் இந்த ஊட்டத்தின் தட்டுப்பாடானது ஆற்றல் சுழற்சியை பாதிப்பது அடிக்கடி உடல் சோர்வு ,தொய்வு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் பசியை தூண்டும் ஒரு ஊட்டமாக ஜிங்கு பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஊட்டச்சத்தின் குறைபாடு ஆனது பசியை கட்டுப்படுத்தி பசியின்மையால் உண்டாக்கும் பல்வேறு பிரச்சனைக்கு வழி வகுக்கிறது. ஆய்வுகளின் படி குழந்தைகளின் உடலில் உண்டாகும் இந்த ஜின் குறைபாடானது அவர்களின் செரிமான மண்டலத்தை பாதித்து வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

வளரும் குழந்தைகள் எதிர்கொள்ளும் கூந்தல் உதிர்வு பிரச்சனையானது அவர்களின் உடலில் ஜின் தட்டுப்பாட்டு உண்டாவதால் இருக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவு வழக்கத்தின் மூலம் இந்த ஜின் தட்டுப்பாட்டினை நாம் தவிர்க்கலாம் எனவே உங்கள் குழந்தைக்கு ஜிங்க் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை அளிக்க தவறாதீர்கள்.

Tags

Next Story