கடும் வெயிலில் பாதிக்கும் அம்மை நோய் எப்படி தடுக்கலாம் !!
அம்மை நோய்
அக்னி நட்சத்திர வெயில் தொடர்கிறதோ என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் கடுமை நீடிக்கிறது. இதனால் பல நோய்கள் நம்மை நோக்கிப் படையெடுக்கின்றன. அவற்றில் அம்மை நோய்களுக்கு முக்கிய இடமுண்டு. அதிலும் குறிப்பாகச் சின்னம்மை நோய் அதிதீவிரத் தொற்றுநோய் என்பதால், இதுதான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வளிமண்டலத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தால், உடல் வெப்பம் அடைகிறது. இதுதான் அம்மை வரக் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. உடல் வெப்பத்துக்கும் அம்மை நோய்க்கும் தொடர்பில்லை. கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை, கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் ‘வேரிசெல்லா ஜாஸ்டர்' எனும் வைரஸ் கிருமி. இதன் மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது.
நம் நாட்டில் அம்மை ஒழிப்புத் திட்டம் கொண்டு வந்ததன் மூலமும் நம்மை தடுப்பூசி போட்டதன் மூலமும் அம்மை நோய் அதிகமாக இல்லை இந்நோய் வெயில் காலத்தில் வருகிறது. இந்நோய் கண்டவரின் உடலில் முத்துக்கள் போன்று சிறிய கொப்புளங்கள் தோன்றி விகாரமாக காட்சியளிப்பர். இந்நோய் கண்டவர்க்கு சமைத்த உணவு, செயற்கை பானம் எதுவும் தராமல் இளநீர், தேன் கலந்த தண்ணீர், பானை நுங்கு, இளநீர் வழுக்கை ஆகியவற்றையே உணவாக கொடுத்து வர வேண்டும் வாழைப்பழத்துடன் இளநீர் சேர்த்து குலைத்து சிறிது தேனும் கலந்து கொடுக்கலாம். உடலின் அரிப்பு ஏற்பட்டால் கைவிரல்களை கொண்டு சொரியாமல் வேப்பிலைகளை கொத்தாக கையில் பிடித்து உடலில் தடவி வர வேண்டும்.