ஹைபர் டென்ஷன் இருக்குதா !! அப்போ மறந்தும் இந்த 6 -வகை உணவை தொடதிங்க.....

ஹைபர் டென்ஷன் இருக்குதா !! அப்போ மறந்தும் இந்த 6 -வகை உணவை தொடதிங்க.....

ஹைபர் டென்ஷன் 

ஹைபர் டென்ஷன் என்னும் உயர் ரத்த அழுத்தம் உங்களுக்கு இருக்கா? அப்போ இந்த உணவுகளை எல்லாம் நீங்கள் சாப்பிடவே கூடாது. ஹைபர் டென்ஷன் என்பது உயர் ரத்த அழுத்தத்தைக் குறிக்கும் மற்றொரு சொல்லாகும். ஹைபர் டென்ஷன் உண்டாவதற்கு முக்கியக் காரணமே நம்முடைய வாழ்க்கை முறை மாற்றங்களும் மன அழுத்தம் உள்ளிட்டவையும் தான்.

இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையான காரணி ஒன்று இருக்கிறது. அது நம்முடைய உணவுப் பழக்கம். நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் சில ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதிலும் ஏற்கனவே சில உணவுகளை தொடவே கூடாது.

* ஸ்நாக்ஸ் என்றாலே ஹைபர் டென்ஷன் உள்ளவர்களுக்கு ஆகாது. அதிலும் உப்பு நிறைய சேர்க்கப்பட்டிருக்கும் ஸ்நாக்ஸ் வகைகள் தான் உங்களின் முதல் எதிரி.

* கடைகளில் டின்களில் கிடைக்கும் ரெடிமேட் சூப் அல்லது பாக்கெட்டுகளில் கிடைக்கும் ரெடிமேட் சூப் மிக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தவே சூடாது. அதில் பதப்படுத்துவதற்காக சோடியம் மற்றும் பிற மோசமான ரசாயனபதப்படுத்திகள் சேர்க்கப்பட்டிருக்கும்.

* ஊறுகாயும் ஹைபர் டென்ஷன் பிரச்சினை உள்ளவர்களுக்கு மிக ஆபத்தான உணவு தான்.

* இனிப்பு நிறைந்த பானங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் நல்லதல்ல.

சோடா, கார்பனேட்டட் பானங்கள், பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் ஆகியவை உடனடியாக ரத்த அழுத்தத்தின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

* மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதன் அளவைக் கட்டாயம் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்ளலும் ரத்த அழுத்தத்தை உயர்த்தும்.

* காபி ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் அளவுக்கு மேல் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்.

அதுவும் சர்க்கரை மற்றும் பால் சேர்க்காமல் பிளாக் காபியாக எடுத்துக் கொள்வது தான நல்லது.

*இந்த ரத்த அழுத்தத்தை உயர்த்தும் அடிப்படையான சில உணவுகளைத் தவிர்த்தால் பெருமளவில் நீங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

Tags

Next Story