விஷக்கடியா..? முதலில் இதை பாலோ ஃபண்ணுங்க!

விஷக்கடியா..? முதலில் இதை பாலோ ஃபண்ணுங்க!

விஷக்கடி

எலிக் கடிக்கு குப்பைமேனி வேருடன் கரிசலாங் கண்ணியிலை திப்பிலி சேர்த்தரைத்து உண்ண வேண்டும் குப்பைமேனி பச்சிலையை நைத்து எலி கடித்த இடத்தில் ஏழு நாட்கள் கட்ட வேண்டும்

பூனைக் கடிக்கு சுண்ணாம்பு, உப்பு, மஞ்சள் ஆகிய மூன்றையும் சோத்தரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் குப்பைமேனி வேருடன் பசும்பால் கலந்து அரைத்து நாள்தோறும் குடிக்க வேண்டும் பூச்சிக் கடிக்கு. நன்னாரி வேரினையும் சோற்றுக் கற்றாழையையும் சேர்த்தரைத்து உண்ண வேண்டும் துளசியை அரைத்துத் தேன் கலந்து உண்ண வேண்டும் வண்டுகடிக்குப் பப்பாளி இலையின் சாறெடுத்து வண்டு கடித்த இடத்தல் பூச வேண்டும் செம்பருத்தி இலைச் சாறெடுத்துக் குடிக்கலாம்.

குளவி கொட்டிற்கு நாயுருவி இலையை மை போல அரைத்துக் கொட்டிய இடத்தில் பூச வேண்டும் புளியையும் சுண்ணாம்பையும் குழப்பிச் சூடாகக் குளவி கொட்டிய இடத்தில் பூச வேண்டும்

நாயக்கடிக்கு நாட்டு வெங்காயமும் பிரண்டையும் சேர்த்து அரைத்து மூன்று நாட்கள் நாய் கடியில் பூச வேண்டும் திருமணித் தக்காளிப பச்சிலையின் சாற்றை நாள்தோறும் இருவேளை குடிக்க வேண்டும் வெறிநாய கடித்தால் இலவம் பிசினையும் கல் சுண்ணாம்பையும் சேர்த்தரைத்துக் கடித்த இடத்தில் பூச வேண்டும் நாயுருவி வேரை எலுமிச்சை விதையுடன் சேர்த்தரைத்து ஏழு நாட்கள் உண்ண வேண்டும்

மனிதக் கடிக்கு அவுரி வேர், நன்னாரி வேர் ஆகிய இரண்டையும் நன்கு அரைத்துப் பாலுடன் கலந்து மூன்று நாட்கள் உண்ண வேண்டும் அரளி விதை தின்ற நஞ்சு முறிய கடுக்காய்க் கஷாயம் சிறந்த மருந்து ஊமத்தை தின்ற நஞ்சு முறிய பருத்தியிளம்காய் பூவைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். போதை மருந்தின் நஞ்சு முறிய, பலாக்கொட்டையை வேகவைத்து உண்ண வேண்டும் தாவர நஞ்சு முறிய. புளியாரைக் கீரைச் சாறு இருமடக்கு குடிக்க வேண்டும் எல்லா வகை விஷக்கடிகளுக்கும் அவுரி வேரை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடிக்க வேண்டும்

பாம்புக் கடி முதலான அனைத்து நஞ்சுகளும் முறிய கொண்டைசானி கெட்டிப்பாலை அல்லது நஞ்சு முறிச்சான் எனப்படும் கொடியை வேருடன் பிடுங்கிச் சுத்தமாகக் கழுவிப பொடியாக நறுக்கி வெயிலில் சருகு போன் காயவைத்து 50 கிராம இடித்துத் தூளாக்கி சலித்து ஒரு கண்ணாடி புட்டியில் வைத்து இப்பொடி 2 தேக்கரண்டி 2 தேக்கரண்டி தேனில் குழைத்து தினமும் இருவேளைகள் வீதம. 3 நாடகள் உண்டு வரலாம் பூச்சிக் கடி வண்டுக் கடிக்கு துளிசியிலைப் பொடி 1 தேக்கரண்டி தேன் 1 தேக்கரண்டியுடன் குழைத்து. சாப்பிட்டு வரலாம்.

Tags

Next Story