அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடானதா?

அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடானதா?

அரிசி சாதம்

அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உண்மையில் மற்ற தானியங்களைப்போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது.

உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை.

சோறு வடிப்பது என்பது பழைய அரிசியைத் தவிடு, நொய் நீக்கி நன்றாக தீட்டி, முழு அரிசியாய் ஆய்ந்து எடுத்து இளவெந்நீரால் கழுவி சற்று ஆற விட்டுவைத்து கொள்ள வேண்டும். அரிசிக்கு மூன்றுபங்கு நீர்விட்டு அடுப்பிலேற்றி அது நுரைய விட்டு கொதிக்கும் பொழுது அரிசியை அதில் போட்டு முக்காற்பங்கு வெந்தவுடன், கரண்டியால் துழாவி வடித்து கொள்ள வேண்டும்.

கஞ்சி வடிந்தவுடன், அந்த அடுப்பு தணலில் சோற்று பானையை வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீர் முற்றிலும் வற்றி பக்குவமாய் இருக்கும் சமயத்தில் எடுத்து கொள்வதே சோறு. இந்த சோறே உணவுக்கு ஏற்றது. வாதம் பித்தம் கபம் ஆகிய முக்குற்றங்களினால் அனைவருக்கும் ஏற்றது. பாதிக்கப்பட்டவர்கள் பத்தியத்திற்கும் உகந்தது ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பண்பு உள்ளது என்பதையும் சொல்லிவைத்தார்கள் பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்கும்.

இரவில் நன்றாக தூக்கம் வரும். மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களை தழுவும் பொதுவாக எந்த உணவாக இருந்தாலும் அளவாக தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதால் கெடுதல் என்பதே உண்டாகாது.

அதுவும் உணவே மருந்து. மருந்தே உணவு என்று வாழ்க்கை முறையை வகுத்து கொண்டு வாழும் தமிழர்களின் உணவே, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களால், பெரிதும் விரும்பும் உணவாகவும் மாறி வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story