உங்க சருமம் இயற்கையாகவே அழகா ஜோல்லிகனுமா ! அப்போ நீங்கள் இதை பலோ பண்ணனும் !!!

உங்க சருமம் இயற்கையாகவே அழகா ஜோல்லிகனுமா ! அப்போ நீங்கள் இதை பலோ பண்ணனும் !!!

skin naturally beautiful

நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு வெளிப்புற பராமரிப்பு மட்டுமின்றி உட்புறமாக நாம் உட்கொள்ளப்படும் உணவுகளும் பெரும்பங்கு வகிக்கின்றன. துரித உணவுகள்,அதிக எண்ணெய் போன்றவை சரும ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியவை. இயற்கையாக நமது சருமத்தை பளபளப்பாகவும் ஈரப்பதமாகவும் வைத்துக்கொள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் உதவுகின்றன.


சருமத்தில் வெடிப்புகள், கோடுகள் போன்றவை காணப்படும் போது அவற்றிற்கு ஏற்ற சிகிச்சைகளை அளிக்க வேண்டும். அதிக சூரிய வெளியில் வெளிப்படுவதாலும், அதிகமாக இது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இந்த பிரச்சனை கொண்டவர்கள் இரசாயனங்கள் கலந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது. மேலும் சரும பராமரிப்பில் சந்தனம், ரோஜா, மற்றும் கற்றாழை போன்ற பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.


எண்ணெய் சருமத்தில் துளைகள் அல்லது அதிக எண்ணெய் பிசுக்குகள் இருக்கும் சருமத்தை கபா சருமம் என்று அழைக்கிறார்கள். சருமத்தை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலமாக இந்த பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். மேலும் நீங்கள் சரும பராமரிப்பு பொருட்களில் துளசி மற்றும் வேம்பு போன்ற இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தலாம்.


நமது சருமத்தில் வறட்சி ஏற்படும் போது சருமம் வறண்டு ஆரோக்கியமற்ற காணப்படும். உங்கள் சருமத்தில் நீர் சத்து குறைபாடு இருக்கிறது என்றால் அதற்கான தீர்வினை கண்டறிந்து பராமரிக்க வேண்டும். குறிப்பாக உங்கள் உணவுகளில் காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து அதிக அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் மட்டும் இன்றி தினமும் திரவம் சார்ந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தில் அபியங்கா எனப்படும் ஆயுர்வேத சிகிச்சையை நீங்கள் மேற்கொள்ளலாம்.


நமது உடலை மட்டுமல்ல சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சிகள் தேவை. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது சரும ஆரோக்கியம் மேம்படுகிறது. தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது தசைகள் வலுப்பெற்று இளமை தன்மையை தக்க வைக்க உதவுகிறது. எனவே தினசரி குறைந்தது அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரமாவது உடல் சார்ந்த பயிற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.


நமது உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியம் சீராக நடைபெறுவதற்கு ஓய்வு என்பது அவசியம். தினசரி குறைந்தது எட்டில் இருந்து 9 மணிநேர முழுமையான தூக்கம் ஒருவருக்கு அவசியம்.கண்கள் வீங்கி காணப்படுதல், இளமையிலேயே வயதானது போன்ற தோற்றம் போன்றவை தூக்கமின்மை காரணமாகவும் ஏற்படுகிறது. எனவே நமது உடலுக்கு தினசரி தேவையான ஓய்வினை கொடுக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.




Tags

Next Story