உடல் எடை இழப்புக்கு இந்த முயற்சிகளை தவிர்ப்பது நல்லது !!
Health
உடல் பருமன் என்பது எடை அதிகரிப்பு மற்றும் அதிகப்படியான கொழுப்பு குவிதல் மட்டுமல்ல. இது ஒரு சிக்கலான உளவியல் நோயியல் நிலை, இறுதியில் அதிக உடல் எடையை விளைவிக்கிறது.
உடல் பருமனை குறைக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கடைபிடிகக் வேண்டும். உடல் எடையை குறைக்க சிலர் சில கடுமையான உணவு கட்டுப்படுகளை மேற்கொள்கிறார்கள். சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால், இவற்றால் சில சமயங்களில் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகின்றது. சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
நாம் எடை இழப்புக்கு எடுக்கும் முயற்சிகளுடன் எதை எல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். உடல் பருமனை குறைக்க நினைத்தால், சில தவறுகளை நாம் கண்டிப்பாக செய்யக்கூடாது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை இழப்புக்கு எடுக்கும் முயற்சிகளுடன் எதை எல்லாம் செய்யக்கூடாதவை :
உடல் எடையை குறைக்க உணவைத் தவிர்ப்பது நல்லதல்ல. உணவைத் தவிர்ப்பது பசியை அதிகரிக்கிறது. மேலும் இது உடலில் ஆற்றல் அளவைக் குறைக்கிறது. இதற்கு பதிலாக, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் சீரான மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொருட்களை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உடல் எடையைக் குறைக்க கார்டியோ பயிற்சிகள் மட்டும் போதும் என நினைப்பது தவறு. கார்டியோ பயிற்சிகள் கொழுப்பைக் குறைக்கும் பணியை செய்கின்றன. ஆனால் நம் உடலுக்கு நல்ல கொழுப்புகளும் தேவை. இவற்றால் உடலில் ஆற்றல் இருக்கும்.
எடை இழப்புக்கு வலிமை பயிற்சி அவசியம் ஆனால் உடலுக்கும் ஓய்வு தேவை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய பயிற்சிகளை செய்வதால் தசைகள் மீது அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக உடல் சோர்வாக இருக்கிறது. ஒரு வாரத்தில் 1 அல்லது 2 நாட்கள் இடைவெளி எடுத்து இத்தகைய நடைமுறையை பின்பற்றினால் சரியாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
அனைவரும் நினைப்பது போல, கார்போஹைட்ரேட்டுகள் எடையை அதிகரிக்காது. எனவே அதை தவிர்ப்பது சரியல்ல. உடலில் கார்போஹைட்ரேட்டின் அளவை சமமாக வைத்திருப்பது முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இது நமது அன்றாட உணவின் இன்றியமையாத பகுதியாகும். ஆகையால், எடையை இழக்க இதை முற்றிலும் தவிர்ப்பது மிகப்பெரிய தவறாகிப் போகலாம்.
உடல் எடை சீக்கிரமாகவே குறைக்க இந்த எளிமையான டிப்ஸ் பாலோ பண்ணுங்க :
என்ன பண்ணாலும் உடம்பு குறையவே மாட்டேங்குது வருதப்படாதிங்க இந்த அஞ்சு விஷயத்தை பண்ணுங்க ஒரு மாசத்துல எவ்வளவு நல்ல ஒரு மாற்றம்னு தெரிஞ்சுக்கோங்க நீங்களே சந்தோஷப்படுவீங்க
* குளிர்ச்சியான உணவு பொருட்கள் எல்லாத்துக்குமே நோ சொல்லிருங்க என்னென்றால் உடல் எடையை நல்ல பூட்டக்கூடிய ஒரு உணவு. உடம்பு இறங்கவிடாத ஒரு உணவாகவும் இனிப்பு இருக்கிறது.
* மலத்தை கட்ட கூடிய உணவு சாப்பிட்டீங்க பெரு வயிறு, தொந்தி, கொலஸ்ட்ரால், எல்லாமே உண்டாக்கும். லேட்டா டின்னர் சாப்ட்டீங்கன்னா உங்களுக்கு உடல் எடையை அதிகரிக்க கஷ்டம் நிறைய வியாதிகள் வரும் மணிக்குள்ள லைட்டா டின்னர் சாப்பிடுங்க.
*காலையிலிருந்து நைட் வரைக்கும் உட்கார்ந்த இடத்தில எல்லா வேலையும் செய்வேன் என்னுடைய வேலையை செயல் அப்படின்னா வெயிட் இறங்க வேற ஏதாவது முடிஞ்ச அளவுக்கு பிசிகல் ஆக்டிவிட்டீஸ் பண்ணுங்க ஒன்றரை மணி நேரம் எக்சர்சைஸ் செய்து பாருங்க.