குழந்தையின் புத்தியை ஷார்ப் ஆக்கும் ஜூஸ்கள்!
ஜூஸ்கள்!
வளரும் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து இருந்தால் தான் அவர்களுக்கு நோய்நொடிகள் ஏற்படாது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் உண்ணும் உணவு அடிப்படையாகிறது..
உடல் வளர்ச்சி மட்டுமல்ல, மூளை வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்துக்கள் அவசியம்... ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களையும் எப்படி சாப்பிட்டால் நல்லது என்பதை தெரிந்து உண்பது பலன் தரும்... ஆரஞ்சு பழத்தை குழந்தைகளுக்குக் கொடுப்பதைவிட, அதன் ஜூஸ் கொடுத்தால் விரும்பிக் குடிப்பார்கள். விட்டமின் சி சத்து கொண்ட ஆரஞ்சு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியுடன் உடலில் ரத்த விருத்திக்கும் பீட்ரூட் ஜூஸ் முக்கியமானது..சில பழங்களை ஒன்றாக சேர்த்து ஜூஸ் செய்தால் ஊட்டச்சத்துக்கள் கூடும். அந்த வகையில் கிவி மற்றும் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து செய்யும் ஜூஸ் இரு மடங்கு சத்துக்களைக் கொடுக்கும்..பல்வேறு நன்மைகளை வழங்கும் கேரட்டை குழந்தைகள் நேரடியாக சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு கேரட் ஜூஸில் எலுமிச்சை சேர்த்துக் கொடுத்தால், வளர்ச்சி துரிதப்படும்..பழமாக கொடுத்தாலும் சரி, இல்லை ஜூஸாக கொடுத்தாலும் சரி, ஊட்டச்சத்துக்களை ஊக்கப்படுத்தும் ஸ்ட்ராபெர்ரி குழந்தைகளுக்கு அவசியமானது..