நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கி - இவ்வளவு மருத்துவ குணங்கள் !!
radish
ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் வேர்ப்பகுதி, இவ்வாறு அழைக்கப்படுகிறது. நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளில் ஒன்று. முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன. தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நார்சத்து போன்றவை காணப்படுகின்றன.
முள்ளங்கியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் என்னும் மூல நோய் பிரச்சனை குறையும். மூல நோயால் ஏற்படும் அரிப்பு மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
முள்ளங்கி சாப்பிடுவது அமிலத்தன்மையில் நன்மை பயக்கும். கருப்பு உப்பு சேர்த்து சாப்பிட்டால் போதும். நல்ல பலன் கிடைக்கும். இது வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குளிர்விக்கும் நார்ச்சத்து போல செயல்படும். பாதி சாப்பிட்டால் போதும். முழுமையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மலச்சிக்கல் பிரச்சனையில் முள்ளங்கியை உட்கொள்வது பல வழிகளில் நன்மை பயக்கும். இது வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை ஊக்குவிக்கிறது மற்றும் செரிமான செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
முள்ளங்கி உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் உணவாகவும் செயல்படுகிறது. வயிறு மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்க உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். இது இரத்தத்தில் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிப்பதன், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கியை தங்கள் தினசரி நிச்சயம் உணவு சேர்த்துக் கொள்ளலாம். இது உங்களை நீண்ட நேரத்திற்கு வயிறு நிறிந்த உணர்வைத் தரும்.
இதய நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. மேலும் முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வர உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை சீராக்கி உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை பெருமளவு குறைக்கிறது.