மனிதனின் மூளை.. சில சுவாரஸ்ய தகவல்கள்!

மனிதனின் மூளை.. சில சுவாரஸ்ய தகவல்கள்!

மூளை 

சிறு அதிர்ச்சிகளை கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவில் மென்மையானது மூளை.

மனிதனாக பிறக்கும் எல்லோருக்கும் மூளையின் அமைப்பு என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.உடலின் தலைமைச் செயலகமாக செயல்படும் மூளை, நமது உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மருத்துவ அறிவியலில் ஏராளமான முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும்போதிலும் மனிதனின் மூளைக்குள் பொதிந்திருக்கும் ரகசியங்களையுளும், அதன் சிக்கல்களையும் இது வரை எவராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே உள்ளது. றக்கும்போது குழந்தையின் மூளையின் எடை சுமார் 300 கிராம் தான் இருக்குமாம். பிறந்ததில் இருந்தே வளர்ந்து வரும் மூளையின் வளர்ச்சி என்பது 18 வயதில் நின்றுவிடும். சராசரியாக வளர்ந்த ஒரு ஆணின் மூளை ஒன்றரை கிலோ எடையுடன் இருக்கும். பெண்ணின் மூளை சுமார் 1100 முதல் 1300 கிராம் வரை இருக்கும்.

மூளையில் உள்ள பகுதிகள்:

மூளையில் பெருமூளை, நடுமூளை மற்றும் சிறுமூளை ஆகிய பகுதிகள் உள்ளன. உடலுக்கு கட்டளையிடும் பெரும்பாலான பணிகளை பெருமூளை மற்றும் சிறு மூளையே செய்கிறது.

மென்மையானது மூளை:

நமது மூளை சிறு அதிர்ச்சிகளை கூட தாங்க முடியாத அளவுக்கு மிகவும் மென்மையானது. அதனால் தான் நான் கீழே விழுந்து தலையில் அடிபட்டாலோ, அல்லது தலையில் பலமான காயம் ஏதும் ஏற்பட்டாலோ நாம் கவனமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தால் மூளை நரம்புகள் வெடித்து ரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் உண்டு.

மூளை ஆரோக்கியமும் தூக்கமும்:

ஓய்வே இல்லாமல் தொடர்ச்சியாக அதற்கு வேலை கொடுத்துக் கொண்டே இருந்தால் அதுவும் சோர்வாகிவிடும். மூளையும் கணினி போல் தான் செயல்படுகிறது.நன்றாக தூங்கி பின்னர் அதனை ரீஸ்டார்ட் செய்தால், புத்துணர்ச்சியுடன் அது மீண்டும் முழு வீச்சில் செயல்படும்.

மூளை செயல்படும் விதம்:

மூளைக்குள் பல நூறு கோடி நியூரான்கள் உள்ளன. ஒவ்வொரு நியூரானும் சுமார் 10,000 இணைப்புகளைக் கொண்டவை.

இந்த இணைப்புகள் மூலமாகத்தான் உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும் நரம்பு மண்டலத்தை அது தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது.

Tags

Next Story