வலிகளை போக்க உதவும் மாம்பூக்கள்!!!

வலிகளை போக்க உதவும் மாம்பூக்கள்!!!

 மாம்பூக்கள்

மாம்பூக்களை பயன்படுத்தினால் பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை ஏற்படும். மாமரத்தின் காய், பழம், இலை, பட்டை, மாங்குச்சி, மட்டுமல்ல, மாப்பூக்களும் ஆரோக்கியத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் உதவியாக இருக்கின்றன. தலைவலி, தலைபாரம் ஜலதோஷம் இருந்தால், மாம்பூவைச் தணலில் போட்டு அதன் புகையைத் தலையில் படுமாறு செய்தால் இந்த பிரச்சனைகள் நீங்கிவிடும் .. மாம்பூ மற்றும் மாந்தளிரை நீரில் போட்டு கொதிக்க வைத்து இளம் சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி சரியாகிவிடும். மாம்பூக்களை சிறிதளவு வாயில் போட்டு மென்று வந்தால் பல்வலி குணமடையும். பற்கள் மற்றும் ஈறுகள் பலமடையச் செய்யும் தன்மையை மாம்பூ கொண்டுள்ளது. மாம்பூக்களை நன்றாக உலர வைத்து பொடிசெய்து வைத்துக் கொண்டு வேண்டும்போது பயன்படுத்தலாம். இந்தப் பொடியை மோரில் கலந்து பருகினால் வாய்ப்புண், வயிற்றுப்புண் என உடலின் உள் பகுதிகளில் ஏற்படும் புண்கள் ஆறிவிடும். தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிட முடியாமல் அவதிப்படும்போது, மாம்பூக்களை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். பிறகு இந்த சாறை வடிகட்டியபின், எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து, தொண்டைக்குள் இறங்குமாறு தண்ணீரை வாயில் ஊற்றி கொப்பளித்தால் தொண்டை வலி குணமாகும்..மாம்பூ, மாதுளம் பூ, மாந்தளிர் என மூன்றையும் சம அளவு சேர்த்து நீர் விட்டு மைபோல் அரைத்து பசும்பாலில் கலந்து காலையிலும் மாலையிலும் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சீதபோதி நீங்கிவிடும்.

Tags

Next Story