பலவகையான ஆரோக்கிய பிரச்சனைக்கு தீர்வாகும் செவ்வாழை பழம் !!
செவ்வாழை
உலகில் பலவகையான பழங்கள் உள்ளது. அந்த பழங்களில் ஓன்று வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தில் பல ரகங்கள் உள்ளது. அந்த ரகங்களில் ஓன்று தான் இந்த செவ்வாழை பழம். செவ்வாழை பழத்தில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.. பலவகையான ஆரோக்கிய பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது.
செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமடைகிறது.
கருவுற்ற பெண்களுக்கு வரும் வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு எல்லாவற்றையும் செவ்வாழைப்பழம் நிவர்த்தி செய்கிறது.
கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால், இதில் அதிகம் இருக்கும் பொட்டாசியம், கர்ப்பிணி பெண் மற்றும் அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நன்மைகளை தருகிறது.
மலச்சிக்கல், மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
செவ்வாழையில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
இரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் இரத்தம் சென்று வர செவ்வாழை உதவுகிறது.
இரத்த மண்டலத்திற்கும், கண்களுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன.மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவுக்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
அனைத்து வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப் பழம் குணமாக்கும். சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணியாக உள்ளது.
தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழைப் பழம் சாப்பிட நரம்புகள் பலம் பெறும்.
குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு அரை தேக்கரண்டி தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும்.
தொற்று நோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழைப் பழத்தில் உள்ளது. மூளை எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க செய்வதில் செவ்வாழைப் பழம் உதவுகிறது.
இந்த செவ்வாழை பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டோம் என்றால் சில பக்க விளைவுகளையும் ஏற்படும், அது என்னென்ன பக்கவிளைவுகள் என்று இப்பொழுது நாம் தெரிந்துகொள்வோம் வாங்க.
2022 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாழைப்பழங்களை உட்கொள்வது சில சமயங்களில் வாழைப்பழத்தில் உள்ள புரதங்களின் காரணமாக அசாதாரணமான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் வாழைப்பழத்தில் ஒவ்வாமை ஏற்படலாம் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
சிவப்பு வாழைப்பழத்தை அதிகமாக உட்கொள்வதால் வாந்தி, வீக்கம், வாய்வு, குமட்டல் போன்றவை ஏற்படும்.
கூடுதலாக, சிவப்பு வாழைப்பழங்களை அதிகமாக உட்கொள்வது உடலில் பொட்டாசியம் அளவை அதிகரிக்கும் மற்றும் அசாதாரண ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தும் (இதய துடிப்பு அதிகரிப்பு).
சிவப்பு வாழைப்பழங்களை உட்கொள்வதால் ஒவ்வாமை, வாய்வு, வீக்கம், வாந்தி போன்ற ஏதேனும் பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டால், இந்த சந்தர்ப்பங்களில், விரைவில் மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறது .