பெண்களை வாட்டி வதைக்கும் மாதவிடாய் - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் !

பெண்களை வாட்டி வதைக்கும் மாதவிடாய் - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் !
X

Health

மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வழக்கமான ஒன்று. அதிலும்'ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’ பிரச்னை இருப்பவர்களுக்கு டென்ஷன், படபடப்பு, தலைவலி, கை, கால்வலி போன்ற பிரச்னைகளும் சேர்ந்துகொள்ளும். இது தவிர வாந்தி, செரிமானக் கோளாறு என ஏராளமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு பெண்களை வாட்டி வதைக்கும். இதை தவிர்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம்.


பலர் மாதவிடாயின் போது கழிப்பறையை பயன்படுத்துவதை கஷ்டமான ஒரு விஷயமாக நினைத்து,அந்த நாட்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு வயிற்றுவலி குறையும். தண்ணீருக்கு பதில் ஜூஸ்களையும் குடிக்கலாம்.


அந்த நாட்களில் கால்கள் இழுப்பதும், கிராம்ப்ஸ் புடித்து அடி வயிற்றில் அதிக வலியும் இருக்கும். அதனால் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், வெண்டைக்காய், பாதாம் மற்றும் கீரை வகைகளையும் சாப்பிடுங்கள்.


டார்க்சாக்லேட்டுகளைச் சாப்பிடுவதால் செரட்டோனின் அதிக அளவு சுரக்கிறது. அதனால் மாதவிடாயினால் ஏற்படும் டென்ஷன், பதட்டம் குறைய சாக்லேட் சாப்பிடுங்கள்.

அதிக கொழுப்புள்ள வெண்ணெய், கிரீம் போன்ற உணவுகள் பெண்களின் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனைத் தூண்டிவிடும். மாதவிடாய் காலத்தில் இதனால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது இதனை தவிர்த்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்னையால் பலர் சாப்பிடவே மாட்டார்கள்.சாப்பிடாமல் இருப்பதால் கிராம்ப்ஸ்தான் அதிகம் வரும் . அதனால்உணவில் பட்டாணி, கோதுமை, ரெட் பீன்ஸ், அவகாடோ, கொய்யா, ப்ராக்கோலி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளஃபீல் ஃப்ரீயாக உணர்வீர்கள்.


வைட்டமின் பி6 நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை சரிசெய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, 'ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’- ஐ குறைக்கிறது. வைட்டமின் டி எலும்புகளை வலுவாக்கிறது.




Tags

Next Story