பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சனை கருவளையம் - இயற்கையான முறையில் சரி செய்ய வழிகள் !!

பெரும்பாலும் பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் கருவளையம் ஒன்று. அதிக நேரம் கணினியில் நேரடித்தை செலவிடுதல், டிவி பார்த்தல், மொபைல் போன் பயன்படுத்துதல், இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருத்தல் போன்ற பல காரணிகள் கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளன. குளிர்காலத்தில் கருவளையம் சற்று அதிகமாகவே இருக்கும். இயற்கையான முறையில் சரி செய்வதற்கு பல வழிகள் உள்ளன.
தூக்கமின்மை என்பது உடல் ஆரோக்கியத்தை முற்றிலுமாக பாதிக்க கூடியது. தினசரி நமது உடலுக்கு தேவையான ஓய்வினை கொடுக்க வேண்டியது மிக அவசியம். இரவில் சரியாக தூங்காத போது நமது கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுகிறது.
அதிக நேரம் சூரிய ஒளியில் வெளிப்படும் போது நமது சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் கண்களும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நீண்ட நேரம் சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவதன் காரணமாக மெலனின் என்ற நிறமியின் உற்பத்தி தூண்டப்பட்டு கண்களுக்கு கீழே கருவளையம் ஏற்படுகிறது. சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்றால் அதற்கு தகுந்த மாதிரியான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது.
இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய இந்த பாதாம் எண்ணெய் நமது கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் சரி செய்ய உதவுகிறது. பாதாம் எண்ணையுடன் வைட்டமின் ஈ சேர்ந்து கலந்து கருவளையம் உள்ள பகுதியில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவிக்கொள்ளவும். தொடர்ந்து இவ்வாறு செய்து வர கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் விரைவில் மறையும்.
நமது சருமத்திற்கு ஈரப்பதத்தை தரக்கூடிய மிகச்சிறந்த உண்ணக்கூடிய பொருட்களில் வெள்ளரிக்காயும் ஒன்று. வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதுடன் நேரடியாகவும் சருமத்தில் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய் துண்டுகளை வட்ட வடிவில் வெட்டி கண்களின் மேலே வைத்து சிறிது நேரம் மூடிக்கொள்ளவும். கருவளையத்தை சரி செய்வதற்கு இவை உதவுகின்றன. இது கண்களுக்கு குளிர்ச்சியையும் ஓய்வையும் புத்துணர்ச்சியையும் தருகிறது.
உருளைக்கிழங்கில் உள்ள பண்புகள் கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை சரி செய்ய உதவுகின்றன. உருளைக்கிழங்கு ஒரு இயற்கையான பிளீச்சிங் ஏஜெண்டாக செயல்படுகிறது. இதனை நேரடியாக கருவளையங்கள் ஏற்பட்ட பகுதியில் பயன்படுத்தும் போது சிறந்த தீர்வினை பெற முடியும்.
சரும பராமரிப்பு பொருட்களில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய இந்த ரோஸ் வாட்டரை கண்களுக்கு கீழே ஏற்படும் கருவளையங்களை சரி செய்யவும் பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கை டோனராக பயன்படுகிறது.
தக்காளியில் உள்ள பண்புகள் நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. ஒரு ஸ்பூன் தக்காளி சாற்றை எடுத்து அதை கருவளையம் உள்ள பகுதியில் தடவி மசாஜ் செய்யவும். தக்காளியில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் கருவளையத்தை வெகு விரைவில் சரி செய்ய உதவுகின்றன.