நெயில் பாலிஷை வீட்டியில் இருக்கும் பொருட்களை வைத்து ரிமூ செய்யலாம் !!

நெயில் பாலிஷை வீட்டியில் இருக்கும் பொருட்களை வைத்து ரிமூ செய்யலாம் !!

நெயில் பாலிஷ்

பெண்கள் தங்களது உடை மற்றும் மனநிலைகளுக்கு ஏற்ப நகங்களில் நெயில்பாலிஷை போட்டு அழகுப்படுத்தி கொள்வார்கள். ஆனால் சில நேரங்களில் நெயில் பாலிஷை அகற்ற பயன்படுத்தப்படும் ரிமூவர் இல்லாமல் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நெயில் பாலிஷை அகற்றுவது எப்படி என பார்க்கலாம்.


நெயில் பாலிஷை அகற்ற வினிகர் மற்றும் எலுமிச்சை உதவியாக இருக்கிறது. இதற்கு முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதனுடன் நான்கு சொட்டு வினிகர் கலந்து கொள்ள வேண்டும். இதனை கை விரல் நகங்களில் தட வேண்டும். 5 நிமிடங்களுக்கு பின்னர் காட்டன் பஞ்சினால் துடைத்தால் நெயில் பாலிஷ் எளிதாக அழிந்துவிடும்.


நெய்ல் பாலிஷை அகற்ற பெர்ஃபியூம் உதவியாக இருக்கிறது. சிறிது பெர்ஃபியூமை காட்டனில் தெளித்து நகங்களை துடைக்கலாம். 3 முதல் 5 நிமிடங்களுக்கு இப்படி செய்வதால் நெயில் பாலிஷ் நீங்கிவிடும். ஒவ்வாமை இருந்தால் இதனை தவிர்த்துவிடலாம்.


பெரும்பாலான சானிடைசர்களில் சிறிது ஆல்கஹால் உள்ளது. இது நெயில் பாலிஷை மென்மையாக்கி நல்ல கரைப்பானாக செயல்படும். முதலில் நகங்களை வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும். பின்னர் பஞ்சு உருண்டையில் சிறிது சானிடைசர் தெளித்து நெயில் பாலிஷை துடைத்தால், நகங்களில் உள்ள நெயில் பாலிஷ் அகன்றுவிடும்.


முதலில் டூத் பேஸ்ட்டுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து பிரஸ்சின் உதவியுடன் நகங்களில் மென்மையாக தேய்க்க வேண்டும். இதை அப்படியே 5 நிமிடங்களுக்கு காய வைத்து கழுவினால் நெயில் பாலிஷ் நீங்கிவிடும்.




Tags

Next Story