மூட்டு வலி போக்கும் பல இயற்கை வைத்தியம் !!

மூட்டு வலி போக்கும் பல இயற்கை வைத்தியம் !!

இயற்கை வைத்தியம்

மூட்டு வலி லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். மூட்டு வலி உடலின் எந்த மூட்டுகளையும் பாதிக்கலாம், ஆனால் பொதுவாக பாதிக்கப்படும் மூட்டுகள் முழங்கால்கள். மூட்டு வலி போக்கும் இயற்கை வைத்தியம் பற்றி இப்போ நாம் பார்போம் வாங்க.

சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும். கசகசா துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும்.

முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும். வேப்ப எண்ணெய் விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து சூடாக்கி மூட்டு வலி உள்ள இடத்தில் தடவ வலி குறையும்.

நொச்சி இலைச்சாற்றை கட்டியாக எடுத்து மூட்டு வலி உள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும். நொச்சி இலை உத்தாமணி இலையை வதைக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி குறையும்.

கருநொச்சி இலைகளை நறுக்கி உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும். அழிஞ்சில் இலைகளை துண்டுகளாக நறுக்கி வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலி மேல் ஒத்தடம் கொடுத்தால் மூட்டு வலி குறையும்.

வில்வ மர இளத்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம். கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை சிறிது அளவு கலந்து வலியுள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குறையும்.

பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டு வலி குறையும், புங்கன் இலைகளை நீரிலிட்டு காய்ச்சி இந்நீரால் மூட்டு வலி ஏற்பட்ட இடத்தை கழுவி வந்தால் மூட்டு வலி குறையும்.

Tags

Read MoreRead Less
Next Story