மாம்பழம் மட்டுமல்ல மா இலையிலும் நன்மைகள் இருக்கு அது என்னனு பார்க்கலாம் வாங்க !!!!

மாம்பழம் மட்டுமல்ல மா இலையிலும் நன்மைகள் இருக்கு அது என்னனு பார்க்கலாம் வாங்க !!!!

மா இலை

வெயில் காலத்தில் மாம்பழம் நிறைய கிடைக்கும் கோடைகால சீசன் பழமாக மாம்பழம் உள்ளது. வருடம் முழுவதும் காத்திருந்து இந்த சீசனில் நிறைய சாப்பிடுவோம் ஆனால் மா இலைகளை பெரிதாக நம் கண்டு கொள்வதில்லை ஆனால் அதில் அதிகளவு நன்மையும் உள்ளது. மா இலை எப்படி சாப்பிடலாம்? யாரெல்லாம் சாப்பிடலாம் விளக்கமாக பார்க்கலாம்.

மாம்பழம் தான் முக்கனிகளில் முதன்மையானது ஆனால் இது எல்லா காலங்களிலும் கிடைக்காது வெயில் காலத்தில் தான் கிடைக்கும் ஆனால் மாயிலைகள் எல்லா நேரத்திலும் நமக்கு கிடைக்கக் கூடியது இந்த இலையை வெயிலில் உலர்த்தி எடுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு வருடம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மா இலைகளில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. இவை இரண்டுமே நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகளில் இருந்தும் நன்மை காக்கும்.

மா இலைகளில் நார்ச்சத்துக்கள் மிக அதிக அளவில் இருக்கின்றன இவை ஜீரண ஆற்றலை மேம்படுத்தக்கூடியது குடல் இயக்கம் சீறாவதால் மலச்சிக்கல் ,அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்சனைகளையும் தீர்க்கும் குறிப்பாக நீரழிவு உள்ளவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலும் இதனால் கட்டுக்குள் வரும் சர்க்கரையும் கட்டுக்குள் வரும் நீரழிவு நோயாளிக்கும் மா இலை ஒரு அற்புதம் மூலிகை என்று சொல்லலாம் ஆயுர்வேதத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு மாயிலை பொடி மிகச்சிறந்த மருந்தாக கூறப்படுகிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் மாயிலை மிகச் சிறப்பாக செயல்படுகிறது காலை வெறும் வயிற்றில் வெந்நீரில் மாவிலை பொடியை கலந்தோ அல்லது இலைகளை டீபோட்டு குடித்து வர ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் மாயிலையில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது இது சிறுநீரகத்தில் உள்ள அதிகப்படியான சோடியத்தை வடிகட்டி வெளியேற்றும் மா இலைகளில் உள்ள பொட்டாசியம் மற்றும் கனிமச்சத்துக்கள் சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற உதவி செய்கிறது.

சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு ஆயுர்வேதம் மாயிலை பயன்படுத்துகிறது ரத்த அழுத்தத்தை எப்போதும் சீராக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம் ரத்த அழுத்தம் சீராகவே இல்லாத போது அது மாரடைப்பு பக்கவாதம் உள்ளிட்ட கார்டியோவாஸ்குலார் நோய்களை ஏற்படுத்தும் ஆபத்து உண்டு இத்தகைய ஆபத்தான ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க மாயிலை பயன்படுகின்றன. மாவிலைகளின்டானின்கள் ரத்தக் குழாய்களை விரிவடைய செய்து ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்யும்.

இதனை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது. பாலூட்டும் தாய்மார்கள் மாயிலைகளை மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. இயல்பாக உள்ளவர்களும் ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் அளவு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது மா இலைகளை துளசி ஆகியவற்றுடன் சேர்த்து டீயாக செய்து குடித்து வரலாம். மா இலையை கசாயமாக்கி குடிக்கலாம்.

மாவிலைகளை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அதை தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரலாம். மாவிலை பொடி வெந்நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.

Tags

Next Story