ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் துவரம் பருப்பு!!!
துவரம் பருப்பு
பருப்பு வகைகள் அனைத்துமே நமது உடல்நலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான சத்துக்களை கொண்டது. இதில் தென்னிந்திய சமையலில் அன்றாடம் இடம்பெறும் ஒரு பருப்பு வகை என்றால், அது துவரம் பருப்பு தான்.ஏராளமான புரதச்சத்து கொண்ட துவரம் பருப்பு:
துவரம் பருப்பில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் வளர்ச்சிக்கு புரத சத்து மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.துவரம் பருப்பில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்: துவரம் பருப்பை தினம் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலின் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். உடலுக்கு ஆற்றலைப் அள்ளிக் கொடுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட துவரம் பருப்பு, சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரும்.துவரம் பருப்பில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இரும்பு, புரதம், மெக்னீசியம், கால்சியம், ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதில் அதிக அளவில் காணப்படுகின்றன. செரிமான அமைப்பை பலப்படுத்தும் துவரம் பருப்பு: உடலில் உள்ள கழிவுகளை நீக்கி வெளியேற்ற நார்ச்சத்து உதவுகிறது. இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் துவரம் பருப்பு: துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், இரத்த குழாயை விரிவடைய செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.