முருங்கை கீரை சூப் செய்வது எப்படி ?
முருங்கை கீரை சூப்
முருங்கை கீரையில் இவ்ளோ நன்மைகளா ? இது தெரிந்தால் கட்டாயம் நீங்க இந்த டிஸ்சை செய்வீங்க !
கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்வதால் உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை எடுத்து கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும், சளி ,இருமலை கட்டுப்படுத்தவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. வாங்க! மகத்தான இந்த முருங்கை கீரை சூப்பை எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கை இலை -1 கட்டு
சீரகம் -1 ஸ்பூன்
சிறியவெங்காயம் -5
மிளகு தூள் -1/2 ஸ்பூன்
தண்ணீர் -3 கப்
பூண்டு -5 பற்கள்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்-50 ml
தக்காளி -1
செய்முறை
முதலில் முருங்கை இலையை காம்பு நீக்கி நன்றாக அலசி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும் சீரகம் சேர்த்து வதக்க வேண்டும்.
சீரகம் வதங்கியதும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வதக்கியதும் முருங்கை இலைகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்தால் சூப் ரெடி!
இந்த சூப்பை சூடாக குடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.