வாழையிலை குளியல் !
வாழையிலை குளியல்
சொரியாசிஸ், வெண்புள்ளி, தொழுநோய் தோல் நோயுடையவர்களுக்கும். உடலில் நச்சுப் பொருட்கள் மிகுதியாக உள்ளவர்கட்கும். இக்குளியல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
இக்குளியலும் வாரமொருமுறை வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும். இதயநோய் உள்ளவர்கள் மட்டும் இக்குளியலைத் தவிர்க்கவும் . காலை மணி 10 முதல் 12 மணிக்குள் நல்ல வெயில் இருக்கும்பொழுது இக்குளியல் எடுக்கவும் உடலில் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு, வயிறு நிறையப் பச்சைத் தண்ணீர் அருந்தவும், தலையில் ஒரு மெல்லிய ஈரத் துண்டினால் தலைப்பாகை கட்டிக் கொள்ளவும், தரையில் ஒரு பாய்விரிக்கவும் அப்பாய் மீது ஒரு ஈர வேட்டியை விரிக்கவும் அவ்வேட்டி மீது குறுக்காக, ஆங்காங்கே சுமார் ஆறு வாழை நார்கள் அல்லது சணல்கள் போடவும், உடல் முழுவதும் வாழையிலையைப் போர்த்திக் கட்டுவதற்கு இந்நார்கள் அல்லது சணல் தேவை.
பின் அந்நார்கள் மீது அகன்ற நீள வாழையிலைகளை உடன் நீளத்தைவிடச் சற்று கூடுதலாக விரிக்கவும். வாழையிலையின் வழுவழுப்பான பகுதி மேல் நோக்கி விரிக்கவும். குளியல் எடுப்பவர் கீழே விரித்துள்ள வாழையிலைகள் மீது மல்லாந்து கால்களைச் சேர்த்து நீட்டிப் படுத்துக் கொள்ளவும். இரு கைகளையும் உடலையொட்டி நீட்டி வைக்கவும். பின்னர் அவரது உடல் மீதும் வாழையிலையின் மென்மையான - வழுவழுப்பான பகுதி படும்படி குப்புறப் போட்டு வாழையிலைகளால் அவரது உடல் முழுவதும் தெரியாதவாறு கட்டவும்.
மூக்குத் துவாரங்களில் மட்டும் சுவாசிக்க வாழையிலைகளில் ஓட்டை போடவும் உடலின் எப்பகுதியிலும் வெயில் படாதவாறு உடல் முழுவதையும் வாழையிலைகளால் மூடிக் கட்டி வெயிலில் சுமார் முப்பது நிமிடங்கள் படுக்க வைக்கவும். முப்பது நிமிடங்கள் வரை இருக்க இயலாதவர்கள் குரல் எழுப்பினால் உடன் வாழையிலைகளை ஒருவர் அவிழ்த்து விட தயாராக இருக்க வேண்டும்.
குளியல் முடித்து வாழையிலைகளை அவிழ்த்து விட்டவுடன் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்திருக்கும் குளியல் எடுப்பவரின் உடலிலுள்ள துர்நீர்கள் மற்றும் நச்சுப் பொருள்கள் இவ்விதம வியாவையாக வெளியேறி உடலும், ரத்தமும் தூய்மையடைந்து நோய நீங்கி, நலம் பெறுவர் வாழையிலைக் குளியலுக்குப் பின் 10 நிமிடங்கள் கழித்து வியர்வையைத் துடைத்து நீ அருந்துக அரை மணி நேரம் கழித்த பின் குளிக்கலாம்.
குறிப்பு வாழையிலைக் குளியல் எடுத்த வாழையிலைகளை உடன் குழி தோண்டி அக்குழிக்குள் குளியல் எடுத்த வாழையிலைகளைப் போட்டு மேலே மண் நிரப்பி மூடிவிடவும். அவ் இலைகளை கால்நடைகள் தின்றால் கால்நடைகள் இறந்துவிடும்.