உடல்நலத்திற்கு நல்லது பச்சை உணவா... வேகவைத்த உணவா...

உடல்நலத்திற்கு நல்லது பச்சை உணவா... வேகவைத்த உணவா...

உடல்நலத்திற்கு நல்ல உணவுகள் 

சில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். சில சமயங்களில் பச்சையாக உண்ணும் போது செரிமானப் பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படலாம். உணவுகளை வேக வைத்து சாப்பிடுவதால், செரிமான பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். வெயில் காலத்தில் பச்சை உணவுகளை சாப்பிடலாம் என கூறப்படுகிறது.

காய்கறி, பழங்கள் போன்றவற்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மற்றும் இரவு உணவு, குளிர் காலத்தில் பச்சை உணவுகளை தவிர்த்தல் நல்லது. வேக வைக்காத அல்லது சமைக்காத பச்சை உணவுகள் உடலில் சேதம் ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. ஆயுர்வேத முறையில் வேக வைக்காத உணவு, செரிமானம், உடல் வெப்ப நிலை, முடி உதிர்தல், தூக்கமின்மை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. காய்கறி மற்றும் பழங்களை ஜூஸாக பருகுவது சிறந்த முறை .

இவை ஊட்டச்சத்துக்களை அளிப்பது மட்டுமின்றி, எளிதாக செரிமானம் ஆகிவிடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டும் பழங்களை கடித்து உண்பது தான் நல்லது. உடலில் உள்ள நச்சுக்களை போக்க, ஆப்பிள், பப்பாளி, பெர்ரி, அன்னாசி, பேரிக்காய் துளசி போன்ற உணவுகளை பச்சையாக அல்லது ஜூஸாக அப்படியே சாப்பிடலாம்.

மேலும் இஞ்சி, மஞ்சள், கொத்தமல்லி வெந்தையம், சீரகம் போன்ற உணவுப் பொருட்களை காய்கறி சூப் போன்று சமைத்து உட்கொண்டாலும் உடலிலுள்ள நச்சுக்களை போக்க முடியும்.

உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை அப்படியே தங்க வைக்க, குறைவான சூட்டில் வேக வைப்பது தான் சிறந்த முறையாகும். இவ்வாறு சமைப்பதால் உணவில் ஊட்டச்சத்து தங்குவது மட்டுமின்றி, செரிமானமும் சீரிய முறையில் இயங்க வழிவகுக்கும்.

மைக்ரோவேவில் மீண்டும் சூடு செய்வதால், அதிலிருந்து வெளிப்படும் சூடு, உணவில் இருக்கும் மூலக்கூறுகளை சிதைத்துவிடுகிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல் என்பதால் மைக்ரோவேவ் ஓவனை தவிர்ப்பது நல்லது.

மஞ்சள், சீரகம், மிளகு சேர்த்து உணவை சமைப்பது சிறந்த முறை ஆகும். இவை உடலுக்கு வலிமையும், நலனும் அதிகரிக்க வைக்கின்றன. மேலும் மிகுதியாய் வேகாமல் அல்லது கருகிவிடாமல் சமைக்க வேண்டும்.

ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. இன்று சமைத்த உணவை இன்றே சாப்பிட்டு விடுவது தான் சிறந்த முறை. எனவே. ஃப்ரிட்ஜில் வைத்து நாட்கள் கடத்தி உணவை உண்ணும் பழக்கத்தை கைவிடுங்கள். இது செரிமான பிரச்சனைகள் உண்டாக முக்கிய காரணமாகும்.

Tags

Next Story