பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் அரிசி கஞ்சி !!
அரிசி கஞ்சி
இந்தியா முழுவதும் அரிசி உணவுகள் சாப்பிடாத மாநிலங்களை காண்பது அரிது. குறிப்பாக தென்னிந்தியாவில் அரிசி பிரதான உணவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அரிசியை சமைத்த பிறகு வடிகட்டினால் கிடைக்கும் கஞ்சி உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும். நம் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட அமிர்தமாக இருக்கும் கஞ்சி தற்போது பிரபலமடைந்து வருகிறது.
1.மலச்சிக்கல் - மூல நோய்க்கு மருந்தாகும் கஞ்சி: சாதம் வடித்த கஞ்சி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம். வயிறு தொடர்பான பிரச்சனைகள் அல்லது நோய்கள், குறிப்பாக மலச்சிக்கல், மூல நோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிப்பவர்களுக்கு அரிசி கஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2.காய்ச்சலில் நன்மை பயக்கும் அரிசி கஞ்சி: முன்பு லேசான காய்ச்சல் ஏற்பட்டால் அரிசி கஞ்சி குடிக்கும் போக்கு இருந்தது. இதன் காரணமாக, உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்பதோடு, ஊட்டச்சத்து குறைபாடும் ஈடு செய்யப்படுகிறது.
3.இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் கஞ்சி: அரிசியில் சோடியத்தின் அளவும் குறைவாக உள்ளது. கஞ்சி உயர் இரத்த அழுத்தம் குறைக்க அல்லது கட்டுப்படுத்த உதவுகிறது.
4. சருமத்திற்கு நன்மை பயக்கும் சாதம் வடித்த கஞ்சி: சாதம் வடித்த கஞ்சி சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இந்த நீர் ஆறியதும், அதைக் கொண்டு முகத்தில் தடவி, சிறிது நேரம் விட்டு, பின் முகத்தைக் கழுவவும்.
5.மாதவிடாய் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் கஞ்சி: அரிசி கஞ்சி, தசைச் சுருக்கங்களைத் தணிக்கவும், மாதவிடாயின் போது வலியைக் குறைக்கவும் உதவும்.