அல்சர்,வயிற்றுப்புண் குணமாக சிம்பிளான டயட். இப்பவே சாப்பிடுங்க!
அல்சர்,வயிற்றுப்புண் ...
வயிற்றின் உள்புறத்திலும் உங்கள் சிறுகுடலின் மேல் பகுதியிலும் உருவாகும் திறந்த புண்கள் பெப்டிக் அல்சர் என்று சொல்லப்படுகிறது. வயிற்றுப்புண்ணின் மிகவும் பொதுவான அறிகுறி வயிற்று வலி தான். வயிற்றின் உட்புறத்தில் ஏற்படும் இரைப்பை புண்கள் மற்றும் சிறுகுடலின் (டியோடெனம்) மேல் பகுதியின் உட்புறத்தில் ஏற்படும் சிறு புண்கள் போன்றவை வயிற்றுப்புண்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த வயிற்றுப்புண்களோடு பல வருடங்களாக இருப்பவர்கள் நம்மில் பலரும் உண்டு. இந்த வயிற்றுப்புண் வராமல் தடுக்க மற்றும் ஏற்கனவே வயிற்றுப்புண் இருப்பவர்கள் என்ன மாதிரியான உணவை எடுத்துகொள்ள வேண்டும் வயிற்றுப்புண் மோசமான ஒன்று. வயிற்று வலி, வயிறு எரிச்சல், வீக்கம் அல்லது ஏப்பம் போன்ற உணர்வு, கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு சகிப்புத்தன்மை இல்லாதது, நெஞ்செரிச்சல், குமட்டல். எரியும் வயிறு வலி போன்றவை இருக்கும். வயிற்றில் உள்ள அமிலம் வெறும் வயிற்றை போன்றே வலியை மோசமாக்குகிறது.
வயிற்று அமிலத்தை தடுக்கும் சில உணவுகள் மூலம் வலி அறிகுறியை குறைக்கலாம். இந்த அல்சர் பிரச்சனையுடன் போராடுபவர்கள் உணவில் சேர்த்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம். இவை வயிற்று வலியை குறைக்க செய்யும் என்பதோடு வயிற்றுப்புண்ணை விரைவாக ஆற்றவும் செய்யும்.
தேவையானவை:
ஓமம் - 100 கிராம்
சுக்கு - 200 கிராம்
அதிமதுரம் - 400 கிராம்
இவை மூன்றுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சுக்கை சுத்தம் செய்து அதன் தோலை நீக்கவும். சுக்கை இடித்து பிறகு ப்ளெண்டரில் சேர்த்து பொடியாக்கவும். அதிமதுரம் சுத்தம் செய்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைக்கவும். இந்த மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
மலக்குடலை சுத்தம் செய்யும் மூக்கிரட்டை கஷாயம்! சரும நோயும் போக்கும், எல்லோரும் குடிக்கலாம்!
தினமும் மூன்று வேளை உணவுக்கு முன்பு ஒருகிராம் இந்த பொடியை தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் புண் தீவிரமாகாது. எரிச்சலும் குறையும்.