நரை முடி பிரச்சனையா!! எளிய வீட்டு வைத்தியங்கள்:

நரை முடி பிரச்சனையா!! எளிய வீட்டு வைத்தியங்கள்:

நரைமுடி 

இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் முடியின் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடுகிறது. இயற்கையாகவே நரை அல்லது வெள்ளை முடியை வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம். வெள்ளை முடி அழகு ஆர்வலர்களுக்கு மற்றொரு கவலையாக உள்ளது. முடி நரைப்பது வைட்டமின் குறைபாடுகள், புகைபிடித்தல் மற்றும் பிற காரணிகளால் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை நரை முடி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மரபியல், மன அழுத்தம் காரணமாகவும் வெள்ளை முடி பிரச்சனை ஏற்படுகிறது. ‘மெலனின்’ எனும் நிறமிதான் நமது தோலின் நிறத்தை முடிவு செய்கிறது..முடி நரைப்பது வைட்டமின் குறைபாடுகள், புகைபிடித்தல் மற்றும் பிற காரணிகளால் ஏற்படுகிறது. பெண்களை விட ஆண்களுக்கே இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது.பொதுவாக நரைமுடியை சரிசெய்ய நெல்லிக்காய் உதவுகிறது. பண்டைய காலங்களில் இருந்தே முடிக்கு மருதாணியை தேய்த்து வருகின்றனர். இது தலைக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.வெங்காயத்தில் பல இயற்கையான நன்மைகள் உள்ளன. முடியை கருப்பாக மாற்றுவதற்கும் இவை உதவுகிறது. வெங்காயத்தை நன்கு அரைத்து அந்த சாற்றை தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊற வைக்கவும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் நரை முடி பிரச்சனை முற்றிலும் சரி ஆகும். தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து முடியில் தடவி வந்தால் நரை முடி பிரச்சனை சரி ஆகும்.

Tags

Next Story