நீரழிவு நோயாளிகளுக்கான எளிய சிகிச்சை முறைகள் !! நீங்கள் இன்சுலின் உபயோகப்படுத்துபவர்களா அப்போ கவனிக்க வேண்டியவை...
இன்சுலின்
இந்தியா தற்போது சர்க்கரை நோயின் தலைமையகமாக உள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் இது மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
அதிக கலோரி உணவும் ,உடற்பயிற்சியின்மையும் இதற்கு முக்கிய காரணமாகும் நீரழிவு நோய் இன்சுலின் என்பது கணையம் சுரக்கும் ஒரு வித ஹார்மோன், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்கிறது.
கணையம் போதிய இன்சுலின் சுரக்காமல் விட்டாலோ அல்லது உற்பத்தி செய்த இன்சுலினை உடல் நன்கு பயன்படுத்த முடியாவிட்டாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. உணவினை குறிப்பிட்ட அளவிலும் குறிப்பிட்ட நேரத்திலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயுடையவர்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி உண்ணா நோம்பை மேற்கொள்ளக்கூடாது. வழக்கத்திற்கு மாறாக கடுமையான உடற்பயிற்சியை உடல் உழைப்பை மேற்கொள்ளக்கூடாது.
உணவை எடுத்துக் கொள்வதாக இருந்தால் தான் இன்சுலினை செலுத்திக் கொள்ள வேண்டும் நோய்வாய்ப்படும்போது இன்சுலினை நிறுத்தி விடக்கூடாது, சர்க்கரை நோயாளி தானே ஊசி போட்டுக் கொள்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
ஊசி போடும் இடத்தில் வளர்ச்சிக்கட்டி ஏற்படுவதோ அல்லது கொழுப்பு உறைந்து போவதோ நிகழும் ஆதலால் அவற்றை தவிர்ப்பதற்காக ஊசி போடும் இடங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
இன்சுலின் அல்லது சர்க்கரை குறைப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது சில வேலைகளில் ரத்தத்தில் சர்க்கரை அளவை எதிர்பார்ப்பை விட மிகவும் குறைந்து போய்விடக்கூடும் அதனால் விபரீத விளைவுகள் ஏற்படும்.