30 வயது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய தோல் பராமரிப்பு குறிப்புகள்!!!
தோல் பராமரிப்பு
பெண்கள் 30 வயதை எட்டும் போது அவர்களின் தோல் சுருக்கம் அடைகிறது. சுற்றுச்சூழல், குடும்ப சூழ்நிலை, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணிகளால் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது.30 வயதை அடையும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான தோல் பராமரிப்புகளில் ஒன்று சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு ஆகும். புற ஊதா கதிர்களின் வெளிப்பாடு காரணமாக முதுமை தோற்றம், சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் தோல் புற்றுநோய் கூட ஏற்படலாம்.ஆரோக்கியமான மற்றும் இளமை தோற்றமுடைய சருமத்தை பெற தோல் சுத்தப்படுத்துதல், டோனிங், மாய்ஸ்சரைசிங் ஆகியவற்றை உள்ளடக்கிய தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.தோலில் இருக்கும் ஈரப்பதத்தைத் தடுக்க, வறட்சியைத் போக்க உங்கள் தோல் வகைக்கு ஏற்ற ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சரைசரைப் தேர்வு செய்வது நல்லது. பிக்மென்டேஷன் அல்லது மந்தமான தன்மை போன்ற பிரச்சனைகளை தீர்க்க வைட்டமின் சி அல்லது ஹைலூரோனிக் அமிலம் போன்ற உட்பொருட்களைக் கொண்ட சீரம் அல்லது கிரீம்கள் பயன்படுத்துவது நல்லது.நல்ல நீரேற்றமுள்ள தோல் எப்போதும் இளமையாகவும் தோன்றும். பெண்கள் 30 வயதை அடையும் போது சருமத்தின் இயற்கையான நீரேற்றம் குறையலாம். இதன் காரணமாக வறட்சி மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை இழக்க நேரிடும். தோல் பராமரிப்பில் ஈரப்பதமூட்டும் பொருட்களை பயன்படுத்துவது நல்லது. மிருதுவான தோலை பராமரிக்க இவை அனைத்தும் அவசியமான ஒன்று. வைட்டமின் சி மற்றொரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது சருமத்தை பிரகாசமாக்குகிறது, கரும்புள்ளிகளை மறைக்கிறது. இருப்பினும், உங்கள் சருமத்தை சரிசெய்யவும் எரிச்சலைத் தவிர்க்கவும் கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்துவது நல்லது. போதுமான ஓய்வின்மை மற்றும் தூக்கம் மந்தமான மற்றும் முன்கூட்டிய முதுமைக்கு வழிவகுக்கும். எனவே போதுமான தூக்கத்தைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவை தேர்ந்தெடுப்பது நல்லது.