துளசியின் சரும மருத்துவ குணங்கள் !!

துளசியின் சரும மருத்துவ குணங்கள் !!

துளசி

சருமத்திலுள்ள பிரச்சினைகளைப் போக்கி ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவி செய்யும் முக்கியமான வீட்டு வைத்தியங்களுள் ஒன்று துளசி.

துளசியில் ஆன்டி மைக்ரோபியல், ஆன்டி இன்பிளமேட்டரி என்ற மருத்துவ பண்புகள் அதிகமாக உள்ளதால் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

துளசி தோல் தொடர்பான நோய்கள் மற்றும் பிரச்சனைகளை குணப்படுத்த உதவி செய்கிறது.


இந்த துளசி இலை சாறுடன் தேன் கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.

முகத்தில் பரு வந்த இடத்திலுள்ள கரும்புள்ளி, தழும்புகள் மறைய துளசி சாறுடன் மஞ்சள் கலந்து இரவில் அப்ளை செய்தால் முகத்தில் இருந்த கரும்புள்ளி, தழும்புகள் எல்லாமே மறைந்து விடும்.


முகம் பளபளக்க ஓட்ஸ் பொடியுடன் துளசி இலை சாறை கலந்து அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும்.

முகக் கருமை நீங்கி நிறம் மேம்பட துளசியுடன் மசூர் பருப்பை அரைத்து அப்ளை செய்தால் கருமை நீங்கி நிறம் மேம்படும்.


துளசியை நீரில் கொதிக்க வைத்து ஆறவிட்டு சருமத்திற்கு டோனராக பயன்படுத்தி வந்தால் அதிசயத்தை நீங்களே காண்பீர்கள்.

Tags

Next Story