தினமும் பின்பற்ற வேண்டிய சில உடல் நல ஆரோக்கிய குறிப்புகள் !!!

தினமும் பின்பற்ற வேண்டிய சில உடல் நல ஆரோக்கிய குறிப்புகள் !!!

உடல் நல ஆரோக்கிய குறிப்புகள்

அன்றாட வாழ்வில் நம் மேற்கொள்ளும் விஷயங்களில் சில தீங்கு விளைவிக்கும். ஆகவே நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ குடிப்பதை விட குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பது மிகவும் சிறந்தது என்று உடல் நல நிபுணர்கள் கூறுகின்றன.

தினமும் இரவு 10 மணிக்கு தூங்கி அதிகாலை 4 மணிக்கு எழும் பழக்கம் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்பாக செயல்படுவோம்.

படுக்கைக்கு முன் உடற்பயிற்சி செய்வது உடலில் தேங்கிய தேவையற்ற கொழுப்புக்களை எரிக்கும்.

மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரில் எடுப்பதை தவிர்த்து வெதுவெதுப்பான நீரில் எடுத்தால் நல்லது.

பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்து இரவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கம் இருத்தல் கூடாது. ஹோட்டல்களில் அதிகம் சாப்பிடுபவர்களை விட வீட்டில் சாப்பிடுபவர்கள் சில ஆண்டுகள் அதிகம் வாழ்கின்றார்கள் என்று கூறுகின்றனர்.

Tags

Next Story