வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய மசாலாப் பொருட்கள் ..!

வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய மசாலாப் பொருட்கள் ..!

தவிர்க்க வேண்டியவை 

கோடைக்காலத்தில் நமது உடல் அதிகம் சூடாகிறது. கோடை காலத்தில் உடல் நீரேற்றமாக இருக்க வேண்டியது அவசியம். இதனால் பலரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் உணவில் பயன்படுத்தப்படும் சில மசாலா பொருட்களை இந்த கோடைகாலத்தில் தவிர்ப்பது நல்லது. நாம் சாப்பிடும் உணவை பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும். கிராம்பு: கிராம்பு உடலுக்கு நல்லது என்றாலும் அதிகம் பயன்படுத்த கூடாது. குறிப்பாக கோடை காலத்தில் மிகவும் கவனமாக சாப்பிட வேண்டும். ஏனெனில் இவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும். மிளகாய்: மிளகாய் பயன்படுத்தாமல் எந்த உணவுகளையும் ருசியாக சமைக்க முடியாது. மிளகாய் கேப்சிகம் இனத்தைச் சேர்ந்த தாவரங்களின் பெர்ரி-பழத்தின் வகைகள் ஆகும். வெயில்காலத்தில் மிளகாயை அதிகம் சாப்பிட்டால் உடலில் எரிச்சலை ஏற்படுத்தும். பூண்டு: உணவில் பூண்டு சேர்த்துக்கொண்டால் உணவின் சுவையை அதிகரிக்கும். பூண்டு வெங்காய இனத் தாவரத்தை சேர்ந்தவை. வெயில் காலத்தில் பூண்டு அதிகம் சேர்த்து கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும். இஞ்சி: இஞ்சி பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி சாப்பிடுவது மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கும். ஆனால் அதிக அளவு இஞ்சியை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். இது உடலை சூடாக்கும்.

Tags

Read MoreRead Less
Next Story