நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் !!!

நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் !!!

நீரிழிவு நோய்

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சரியாக பராமரிக்க வேண்டும், இல்லை என்றால் நீரழிவு போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின், கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து சர்க்கரையை சக்திக்காகப் பயன்படுத்த உங்கள் உடலை அனுமதிக்கிறது, இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான அளவு உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக இன்சுலின் இல்லாமல், சர்க்கரை உடலில் செல்களுக்குள் செல்ல முடியாமல் போகிறது.

1.பார்வையில் மாற்றங்கள்: உங்கள் பார்வையில் திடீரென சில மாற்றங்களை நீங்கள் கண்டால், அது நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உயர் இரத்த சர்க்கரை திரவ அளவை மாற்றுவதன் மூலம் கண்களை பாதிக்கிறது, இதன் விளைவாக வீக்கம், மங்கலான பார்வை அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் உயர் இரத்த சர்க்கரை அளவு காரணமாக நரம்பு இழைகள் சேதமடைவதால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அரிப்பு ஏற்படுகிறது. அரிப்பு பொதுவாக கைகள் மற்றும் கால்களில் உள்ள நரம்புகளை பாதிக்கிறது.

2.கழுத்து பகுதியில் கருமையான தோல்: உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் தோன்றும் அசாதாரணமான அறிகுறிகளில் ஒன்று, உங்கள் தோலில், அதுவும் குறிப்பாக கழுத்து பகுதியில் கருமையான திட்டுகள் தோன்றும். இது அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்றும் கூறப்படுகிறது.

3.நாள்பட்ட நோய்த்தொற்றுகள்: உங்களுக்கு அடிக்கடி ஏதேனும் நோய் தொற்று ஏற்படுகிறது என்றால் உங்களின் நோயெதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இரத்தத்தில் அதிக குளுக்கோஸ் இருந்தால், வெள்ளை இரத்த அணுக்கள் இரத்த ஓட்டத்தில் பயணிப்பது கடினமாகி, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் திறனைக் குறைக்கிறது. இதன் காரணமாக நாள்பட்ட நோய்களும் ஏற்படுகிறது.

4.லேசான தலைவலி: தலைவலி அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை என்றாலும் நாள்பட்ட சோர்வு, தூக்கமின்மை, அதிக தலைவலி போன்றவை நீரிழிவு நோயின் ஆரம்பகட்ட அறிகுறியாக உள்ளது. உயர் இரத்த சர்க்கரையின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று, அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் மயக்கம், இது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.

Tags

Next Story