பித்த வெடிப்புகள் தோன்றும் காரணம் அதனை சரி செய்யும் வழிமுறைகள் !!!
பித்த வெடிப்பு
பித்த வெடிப்பு என்பது வறட்சியின் காரணமாக கரிசல் பூமியில் வெடிப்புகள் ஏற்படுவது போல் குதிகாலின் பின்புறம் வெடிப்புகள் தோன்றும்.
இவ்வாறு வெடிப்புகள் தோன்றாமல் இருக்க காலை மாலை இருவேளையும் குளிக்கும் போது குதிகாலை நன்கு கல்லில் தேய்த்து குளித்து வந்தால் பித்தவெடிப்புகள் தோன்றாது.
குதிகாலின் பின்புறம் அழுக்கு சேர்ந்து அந்த அழுக்கை சரியாக சுத்தப்படுத்தாமல் இருப்பதே பித்த வெடிப்புகள் தோன்ற முக்கிய காரணமாகும்.
மாமரப்பட்டையை வெட்டினால் பிசின் போன்று வரும் மாமர பாலை பித்த வெடிப்புகள் தோன்றிய பகுதிகளில் நாள்தோறும் தடவி வந்தால் பித்த வெடிப்புகள் மறையும்.
விளா மர இலை கஷாயம் அருந்தலாம். அரசமரத்தை குத்தி வரும் பாலை பித்த வெடிப்புகளின் மீது தடவி வந்தால் பித்த வெடிப்புகள் மறைந்துவிடும்.
பீர்க்கு இலையுடன் சுண்ணாம்பு சேர்த்து அரைத்து பித்த வெடிப்புகளில் தடவலாம். மா இலை சாறும் தடவலாம்.