இந்த நெல்லிக்காய்- க்கு இத்தனை சக்தியா !!! அப்போ கண்டிப்பா சாப்டுங்க....
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.
உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும்.
நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நெல்லிக்காய் பொடியுடன் தயிர் சேர்த்து கலந்து ஸ்கால்பில் தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். மேலும் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிப்பதுடன் சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். செரிமான பிரச்னைகளை சரிசெய்ய நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.
மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் நெல்லிக்காய் பொடியை சேர்த்து கலந்து குடிக்கலாம். அசிடிட்டி மற்றும் அஜீரண கோளாறுகள் ஏற்படும்போது, அதனை சரிசெய்ய நெல்லிக்காய் சாப்பிடலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது நெல்லிக்காய்.
நெல்லிக்காயில் குரோமியம் இருப்பதால் உடலில் இன்சுலின் சுரப்பை சீராக வைக்கிறது. தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் இன்சுலின் அளவு சீராக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும்.நெல்லிக்காய் மற்றும் வெல்லம் இரண்டும் சேரும்போது உடலுக்கு தேவையான ஹீமோக்ளோபின் உற்பத்தியாகிறது. உடலில் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்க செய்கிறது.